The Kashmir Files: பிரச்சாரத்தன்மை கொண்ட இழிவான படம் சர்வதேச திரைப்படக்குழு

0
8

The Kashmir Files: தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம் கௌரவம் வாய்ந்த இது போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை பார்த்தது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது என்று தேர்வுக்குழு ஜூரி நாடவ் லேபிட் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தை பிரச்சாரத்தன்மை கொண்ட இழிவான திரைப்படம் எனவும் சாடினார்.

53வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பல புகழ்மிக்க திரைப்படங்கள் மற்றும் சமூக மாற்றத்திற்கான படங்கள் மக்கள் மனதை பிடித்த திரைப்படங்கள் என தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்றன. இதில் 79 நாடுகளை சேர்ந்த 280 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

The Kashmir Files: பிரச்சாரத்தன்மை கொண்ட இழிவான படம் சர்வதேச திரைப்படக்குழு

இதில் சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாஃபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான பிரசார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம்.இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.

இதையும் படியுஙகள்: தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்

இந்த படம் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி வெளியானது. இப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here