மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை மரப்பாதை அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரைகளில் ஓன்று சென்னை மெரினா கடற்கரை இதை தினமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் கண்டு களித்து மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். சென்னை நகருக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இவ்விடத்தில் பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா போன்றோரின் சமாதிகள் மற்றும் அருங்காட்சியங்கள் செயல்பட்டு வருகின்றது. தற்போது முத்தமிழறிஞர் கலைசரின் சமாதியும் உள்ளது. விரைவில் அருங்காட்சியகமும் திறக்கப்பட உள்ளது.
இதை மாற்றுத் திறனாளிகள் சென்று பார்க்க முடியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், கண்களுக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் கடற்கரையை அருகில் சென்று பார்க்கவோ கடல் அலைகள் கால்களை தழுவவோ வழியில்லாமல் மாற்றுத் திறனாளிகள் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தனர். அதை தற்போது தமிழக அரசு மெரினா கடற்கரைக்கு அருகில் சென்று அலைகளின் நடனத்தை ரசிக்கவும் மாற்றுத் திறனாளிகளின் கால்களை அலைகள் தொடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளிகளும் ரசிப்பதற்காக நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப் பட்ட இந்த சிறப்பு பாதையை கடந்த 27ந் தேதி அமைச்சர்கள் மற்றும் உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.
தற்போது, அதில் பல இளைஞர்கள் முதல் அனைவரும் அந்த பகுதியை பயன்படுத்துவதால் மாற்றுத் திறனாளிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். பலர் இதை தடுக்க கோரிக்கையும் வைத்தனர். இதனால் தற்போது காவல்துறை அதிகாரிகள் மாற்றுத் திறனாளி அல்லாதோரை அனுமதிக்காமல் பாதுகாத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: சென்னை மெரினாவில் கலைஞரின் நினைவிட பணிகள் வேகம் அடைந்துள்ளது
இதனால் மாற்றுத் திறனாளிகள் அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.