ஐயப்பன் கோவிலில் புதியதாக மூன்று வேலையும் இலவச அன்னதான திட்டத்தை பக்தர்களின் நலன் கருதி தொடங்கி வைத்தார் தேவசம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்.
கேரளா சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பனை காண கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிந்து ஓரு மண்டலம் விரதம் இருந்து சபரிவாசனை காண பக்தர்கள் தமிழகம், கேரளா, கர்நாடகம், மலையாளம், ஆந்திரா என பல மாநிலங்களிலிருந்தும் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கத்தின் எதிரோலியாக பல கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டதால் பக்தர்கள் குறைந்து காணப்பட்டனர். இந்த வருடம் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் கார்த்திகை முதல் நாளிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

கார்த்திகை மாதம் தொடங்கி ஓரு பத்து நாட்கள் குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர் ஆனால், இந்த வருடம் சபரிமலை திறந்த முதல் நாளிலிருந்தே பக்தர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்து வருகிறது என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பக்தர்களுக்கு உதவ எண்ணற்ற உதவி மையங்கள் மற்றும் அவசர மருத்துவ மையங்கள் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் அதிகரித்து உள்ளது.
இதையும் படியுங்கள்: சபரிமலை: ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதி
இந்த வருடத்திற்கான மண்டல பூஜை காலம் தொடங்கியதால் பக்தர்களின் நலன் கருதி சபரிமலையில் மூன்று வேலையும் இலவச உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அதேபோல் சபரிமலையை பிளாஸ்டிக் மற்றும் குப்பையில் இருந்து பாதுகாக்கும் வகையில், புண்ணிய பூங்காவனம் திட்டத்தையும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.