திருநெல்வேலியில் உலக பிரசித்தம் பெற்ற தலமாக விளங்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலின் ஆனி மாத தேரோட்டம் இன்று காலை 9.00 மணிக்கு கோலாகளமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தேரோட்டம் ஏதும் நடத்த பெறவில்லை. தற்போது கொரோனா சற்று குறைந்து தடுப்பூசி மூலம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அனைத்து விழாக்களையும் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழாவின் ஜூலை 3 ந் தேதி அன்று கொடியேற்றம் நடைப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக, தினமும் நெல்லயப்பர் உடனுரை காந்திமதி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகளும் அர்ச்சனைகளும் தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைப்பெற்று வருகிறது.

விழாவினை ஓட்டி ஓவ்வொரு நாளும் சிற்பபு சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் என கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 7-ம் நாள் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும், 8 மணிக்கு சுவாமி நடராஜப்பெருமாள் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும் நடந்தது.
மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், படையல் பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திங்கட் கிழமையான இன்று ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்டம் வெகு விமர்சையாக காலை 9 மணியளவில் தொடங்கியது. விநாயகர், சுப்ரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்மாபாள், சண்டிகேஷ்வரர் என ஐந்து தேர்கள் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து கொண்டு இருக்கின்றனர்.
இத்தேர் திருவிழா காரணமாக மாவட்டம் முழவதும் அனைத்து பள்ளிக் கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரினை காண பல்லாயிர கணக்கான மக்கள் வந்து தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
நெல்லை மாநகரம் முழுவதும் பொது மக்களின் நலம் கருதி போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.