பிக்பாஸ் 6 ல் அதிரடியாக வெளியேற்றப்பட்ட அசல் கோலார்

0
18

பிக்பாஸ் 6 ல் அதிரடியாக வெளியேற்றப்பட்ட அசல் கோலார். விஜய் டிவியில் ஓளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சிசன் 6 ல் முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட அசல் கோலார்.

விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சிசன்களை முடித்து 6வது சீசனை நடத்தி வருகின்றது. பல சுவாரசி சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கினறது பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே முட்டல்களும் மோதல்களும் நிகழ்ந்து வருகின்றது.

கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 20 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின் அடுத்த ஓரு வாரத்தில் ஓயில்டு கார்டு முறையில் 21 வது நபராக மைனா நந்தினி களம் இறக்கப்பட்டார். இதில் கலந்து கொண்ட யூடிப் பிரபலம் ஜி.பி.முத்து 11 நாட்கள் கடந்ததும் தான் வீட்டைவிட்டு வெளியேறுவதாக கூறி வெளியேறினார்.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்

பிக்பாஸ் 6 ல் அதிரடியாக வெளியேற்றப்பட்ட அசல் கோலார்

அடுத்ததாக போட்டிகள் எப்போதும் போல பரப்பரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமைகளில் ஓருவர் வெளியேற்றப்படலாம் என்றும் மக்கள் மத்தியில் அசல் கோலார் நடந்து கொள்ளும் விஷயங்கள் பிடிக்காத நிலை ஏற்படவே அவரை வெளியேற்றினர்.

அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்தே பெண்களிடம் நடந்து கொள்ளும் விதங்கள் மக்கள் யாருக்கும் பிடிக்காத நிலை இருந்தது. அனைத்து பெண்களையும் கடிப்பது அடிப்பது தடவுவது என பல சில்மிஷங்களில் ஈடுப்பட்டு வந்தார் அதனால் அவரை மக்கள் வெளியேற்ற பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அசல் கோலார் எதற்காக தன்னை வெளியேற்றினார்கள் என்ற காரணம் தெரியாமல் வெளியேறி வந்தார். கமல் சாரிடம் இது குறித்து கேட்கவே வெளியில் போய் அதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி கலாய்த்து வெளியேற்றி விட்டார்.

அசல் வெளியேறுவார் என்றும் அசீம் உள்ளே இருப்பார் என்பதையும் சரியாக கணித்து சொன்னது தனலட்சுமி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கரைத்துக் குடித்த ரச்சிதா தான். அவர்கள் இருவரும் சொன்னதை போலவே கடைசி இடத்தில் தள்ளப்பட்ட நிலையில், அசீம் சேவ் ஆனார்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தில் இணைந்திடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here