இந்தியாவின் உயரிய விருதுகளான கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கி கௌரவித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் விரர் வீராங்கனைகளுக்கு இந்தியாவின் உயரிய விருதுகளை வழங்கி அவர்களை கௌரவப்படுத்துவதை ஆண்டுதோறும் இந்திய அரசு செய்து வருகிறது. சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று படக்கங்களை பெற்று திரும்பும் வீரர்களுக்கு தயான்சந்த் கேல்ரத்னா விருது, அர்ஜூனா விருது, பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியார் விருதுகளை வழங்குவதை வாடிக்கையாக மத்திய அரசு பின்பற்றி ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தமிழகத்தை சார்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலும் ஆவார். இவர் சென்னையை சேர்ந்தவர் என்பது நாம் அறிந்ததே. அதேபோல 25 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தமிழகத்தின் கடலூரை பூர்வீகமாக கொண்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில், மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்டவர்களுக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இந்த விருதுகளை சரத்கமல், பிரக்ஞானந்தா, இளவேனில் வாலாறிவன், அனிகா உள்ளிட்ட தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி மர்மு வழங்கி கௌரவித்தார்.
2022 பர்கிம்காம் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் இந்தியாவிற்கு 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை பெற்று தந்தார். தமிழகத்தின் சார்பில் போட்டியிட்ட பல்வேறு செஸ் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெற்று தந்தவர் பிரக்ஞானந்தா. இதேபோல துப்பாக்கி சுடுதலில் பல பதக்கங்களை பெற்றவர் இளவேனில் வாலறிவன். மேலும், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான ஜெர்லின் அனிகாவுக்கு வயது 17 தான். இவர் பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்தார். இந்த மூன்று பேருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: மெஸ்சியை கார் ஏற்றி கொன்று விடுவேன் குத்து சண்டை வீரர் மிரட்டல்
இது போன்ற பல்வேறு வகையான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.