ஏகே 62 படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

0
19

ஏகே 62 அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். ஆனால், சமீபத்தில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் கூறி வதந்தி காணப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அறிவிப்பு வெளியிட்டது படக்குழு.

நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து மாஸ் எண்டர்டைமண்ட் படமாக கடந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு வருகிறது. இதே நாளில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்ற தகவல் அனைவரும் அறிந்த செய்தியாக பார்க்கப்பட்ட நிலையில் தீடீரென இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார் என்ற வதந்தியும் பெருகியது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அஜித்தின் அடுத்த படத்திற்கு விஷ்ணுவர்தன், ஏ.ஆர்.முருகதாஸ், பிரசாந்த் நீல், மகிழ் திருமேணி ஆகிய இயக்குனர்களை அனுகியதாகவும், இறுதியாக அந்த பட்டியலில் இருந்து இயக்குனர் மகிழ் திருமேணியை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஏகே 62 படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

இது குறித்து படக்குழு எவ்வித அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் ரசிகர்களிடையே பெரும் குழுப்பமும் வதந்தியும் பெருகியிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறித்துள்ளது. அதில், அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்றும் அனிருத் இசையமைக்கிறார் என்றும் தயாரிப்பு பணிகளை சுபாஷ்கரன் செய்கிறார் என்பது போன்ற செய்திகள் அடங்கி அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் அஜித்தின் தீவிர ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: மகேந்திர சிங் தோனி தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் லவ் டுடே நாயகி இவானா

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here