பொன்னியின் செல்வன் 2 குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்புக்குழு

0
8

பொன்னியின் செல்வன் பாகம் 1 உலக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் புதிய சாதனை நிகழ்த்தியது. தற்போது, பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகும் தேதியை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

அமரர் கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை பல காலமாக கண்முன்னே காட்சிகளாக கொண்டுவர பலர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அனைத்தும் தடைப்பட்டு கொண்டு இருந்தது. தற்போது, மணிரத்னம் என்னும் மாபெரும் கலை இயக்குனரால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக 2022 ம் ஆண்டு வெளியாகி அனைவரிடமும் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வருகின்ற ஏப்ரல் 28ந் தேதி உலகமெங்கும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியீடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்புக்குழு

பொன்னியின் செல்வன் பாகம் 1 ல் விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி, பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்ய லட்சுமி போன்ற பல பட்டாளங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடலுகளுக்கு ஏ.ஆர். ரஹகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தங்களது திரை பயணங்களை நகைச்சுவையாக பகிர்ந்தனர். அதிலும் ரஜினிகாந்த் பேசிது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இது போன்ற மாபெரும் நாவலை இரண்டு பாகமாக சுருக்கி வழங்குவது என்பது பெரும் சாவால் நிறைந்த ஓன்று எந்த விஷயத்தை காட்டுவது எதை கோர்த்து விடுவது என்று பெரும் குழப்பம் நிறைந்த ஓன்று அதில் இயக்குனர் மணிரத்னம் தனக்கே உரித்தான திறைமையை முழுவதுமாக கொடுத்து ரசிகர்கள் ரசிக்கும் அளவில் அமைத்து கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில், பொன்னியின் செல்வனின் 2ம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஏகே 62 படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here