துணிவு: அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு பொங்கலன்று ஒன்றாக திரையரங்குகளில் வெளியாகியது. அவரவரவர் ரசிகர்கள் அவரவர் படங்களை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிசு’ படத்துக்கான வெற்றி விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் வாரிசு படத்தில் நடித்துள்ள சரத்குமார், சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதேபோல் துணிவு படத்துக்கும் வெற்றி விழா நடத்த ஏற்பாடு நடந்துள்ளது. ஆனால் அதை அஜித் ரத்து செய்ய சொல்லிவிட்டாராம்.
துணிவு படம் ஓடும் தியேட்டர் முன் அஜித் ரசிகர் ஒருவர் குதூகலம் அடைந்து லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டார். லாரியிலிருந்து தவறி விழுந்து அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை அறிந்து அஜித் அப்செட் ஆகிவிட்டதாக துணிவு படத்தின் ஸடன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார். அந்த ரசிகர் பலியான காரணத்தாலயே படத்தின் வெற்றி விழாவை அஜித் ரத்து செய்ய சொன்னதாக சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார். அந்த படத்தின் தொடக்க விழாவையும் எளிமையாக நடத்த சொல்லியிருக்கிறாராம். பூஜை மட்டும் போட்டு மீடியா வெளிச்சம் படாமல் நடத்துங்கள் என அஜித் கூறியிருக்கிறாராம்.