காபி வித் காதல் படத்தின் ரீலிஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியது

0
5

காபி வித் காதல் படத்தின் ரீலிஸ் தேதி நவம்பர் 4 அன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

இயக்குனர் சுந்தர் சி தான் எடுக்கும் படங்களில் மக்களை மகிழ்விக்கும் படங்களை எடுப்பதிலேயே குறியாக இருப்பவர் இவர் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. தனக்கென தனி பாணியில் ரசிகர்களை கவர்ந்து உள்ளவர்களில் ஓருவர் சுந்தர்.சி இப்போது காபி வித் காதல் படத்தை நிறைவு செய்து அதன் ரீலிஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

சுந்தர்.சி இறுதியாக இயக்கியிருந்த படம் அரண்மனை 3 இதில் அனைவரையும் நகைச்சுவையில் திளைக்க செய்து இருப்பார். காபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ,அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா, சம்யுக்தா ஷண்முகம், ரைசா, ஐஸ்வர்யா தத்தா, தொகுப்பாளினி DD திவ்யதர்ஷினி, ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காபி வித் காதல் படத்தின் ரீலிஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியது

இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ரகளையான ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ரொமான்டிக் காமெடி படமாக தயாராகி வரும் இந்த படத்தினை குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here