இரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியவர்களின் படங்களை புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டடுள்ளது. இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளில் தேச தந்தை மாகாத்மா காந்தியின் படங்களே இடம் பெற்று வருகிறது.
முதன் முதலாக புதிய வரிசை ரூபாய் நோட்டுகளில் மாகாத்மா காந்தியுடன் தாகூர் மற்றும் கலாமின் படங்களை பதிவிட ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலீத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்காளத்தின் தலைசிறந்த அடையாளங்களில் ஒருவராக நினைவு கூறப்படும் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படுபவர். இவர்களின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுவது போற்றுதலுக்குரியது மற்றும் தேச மக்களின் மகிழ்ச்சிக்குரியது.
அமெரிக்க டாலர்
அமெரிக்காவில் உள்ள கரன்சி நோட்டுகளில் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், நாட்டின் ஸ்தாபக தந்தைகளான ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன் மற்றும் அலெக்சாண்டர் ஹாமில்டன் ஆகியோரின் படங்கள் உள்ளன. அதை போல இந்திய ரூபாய் நோட்டுகளிலும் இந்திய தேசத்தில் முக்கிய பங்காற்றியவர்களின் படங்களை அச்சிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.