ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று கடலூரில் நடைபெற்றது

0
12

ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் நேற்று நடைபெற்றது. இதை அறிந்த ரசிகர்கள் ரஜினிகாந்த்தை பார்க்க கூட்டம் கூட்டமாக அலைமோதினர்.

தலைவர் 169 ரஜினிகாந்த்தின் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் தீலிப் குமார் இயக்குகின்றார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கின்றார்.

ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தின் நட்சத்திர நடிகர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய் கார்த்திக் கண்ணன் கேமராவை கவனிக்கிறார்.

ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று கடலூரில் நடைபெற்றது

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஹைதராபாத் சென்றனர். இந்நிலையில்தான் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்

கடலூர் – புதுவை எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள அழகிய நத்தம் பாலம் பகுதியில் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று ரஜினிகாந்த் நடித்த சண்டை காட்சிகள் இந்த பாலத்தில் படமாக்கப்பட்டன. ரஜினியுடன் துணை நடிகர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர்.

படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சாரை சாரையாக அந்த பகுதிக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஷூட்டிங்கை முடித்து விட்டு ரஜினி அந்த இடத்திலிருந்து சென்றார். செல்லும் பொழுது ரசிகர்களை பார்த்து கையசைத்து வணக்கம் கூறி சென்றது அங்குள்ள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here