யோகி பாபு நடித்த ‘மலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு. இப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கான இடம் இன்றும் வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அந்த இடத்தை அவ்வப்போது நிறைவு செய்து வருபவர்கள் சூரி மற்றும் யோகி பாபு. தற்போது முன்னணி நடிகராக யோகி பாபு நடித்து வரும் நிலையில் அவர் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் மலை என்ற படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து உள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் லஷிமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, அறம் புகழ் ராமச்சந்திரன், காளி வெங்கட் ஆகியோர் நடித்து வருகின்றனர். சீனு ராமசாமி, சூந்திரன் ஆகியவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஐ.பி.முருகேஷ் இவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மலை என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு பணிகள் நடந்தது. அங்கு வாழும் மலை வாழ் மக்களின் வாழ்க்கை நிலையினை எடுத்து காட்டுவதாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் அம்மலை வாழ் மக்கள் சிலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஓளிப்பதிவு செய்துள்ளார், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளை செய்துளளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் முதன் முறையாக தாயாரித்திருக்கிறது.
கர்ணன், மண்டேலா படங்களில் தன் நடிப்பு திறமையை நன்றாக காட்டி நடித்துள்ள யோகி பாபு இப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். முதன் முறையாக காளி வெங்கட் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லஷ்மி மேனன் நகரத்தில் இருந்து வரும் ஓரு மருத்துவராக வருகிறார். அங்கு போலி மருத்துவருக்கும் அவருக்கும் நடக்கும் பல விஷயங்களை அழகாக படமாக காட்டியுள்ளனர்.
இந்த படத்தின் முழுபடப் பிடிப்பும் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.