காந்தாரா திரைப்படம் வெகுவாக பேசப்பட்டு பல பாராட்டுகளை பெற்று வந்த நிலையில் அந்த படத்தில் இடம் பெற்ற வராஹ ரூபம் என்ற பாடலுக்கு தடை வித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்குனராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் இப்படத்தை ஓருவராக உருவாக்கியுள்ளார். இப்படத்தை கேஜிஎப்யை தயாரித்த ஹொம்பாலே பிலீம்ஸ் தயாரித்துள்ளது. கன்னடத்தில் உருவாகி வெற்றிக்கு சிறிது நாட்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்து வெளியானது. இந்த படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வந்தது.
நடிகர்கள் தனுஷ், கார்த்தி, பிரபு, கங்கணா ரனாவத், சிம்பு என பலர் பாராட்டி வந்தனர். கங்கணா ரனாவத் இப்படத்திற்கு விருது வழங்கிட பரிந்துறைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியை அழைத்து அவரது வீட்டில் அவருக்கு பாராட்டு தெரிவித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

250 கோடி வசூலில் இடம் பெற்று வந்து சாதனை புரிந்து வந்தது காந்தாரா படம். இந்த படத்தில் ஈடுப்பட்ட படக்குழுவினர் அனைவரையும் பலரும் பாராட்டி வந்த நிலையில், அதில் இடம் பெற்ற பாடல்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.