பகாசுரன் என்பவன் யார்? மகாபாரத கதைக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு

0
15

பகாசுரன் என்பவன் யார்? மகாபாரத கதைக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு என்பதை இப்பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

மகாபாரதம் என்பது வியாசர் எழுதிய நூலாகும். இது ஓரு இதிகாச நூல். இந்நூலில் இடம் பெறும் பாண்டவர்கள் 5 பேருக்கும், கௌரவர்கள் 100 பேருக்கும் உள்ள வாழ்க்கையையும் அவர்களின் போர் பற்றிய செய்திகளையும் கூறும் நூலாக விளங்குகிறது. மகாபாரத கதைகளில் பல கிளை கதைகள் காணப்படுகிறது. அதில் ஓரு கிளை கதையே இந்த பகாசுரன் கதை.

இந்த பகாசூரனின் ஊர் ஏகச்சக்கரம் என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டில் வசித்து வந்தான். இவன் மிகப்பெரிய அரக்கன் நரமாமிசத்தை விரும்பி உண்பவன். பார்க்கவே மிகவும் கொடிய தோற்றத்தை உடையவனாகவும் இருப்பவன். இவனால் இந்த ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் துயரமே அடைந்து வந்தனர்.

இந்த கொடிய அரக்கனை தன் வீரத்தினால் அழித்தவன் பாண்டவர்களுள் ஓருவரான பீமன்.

பகாசுரன் என்பவன் யார்? மகாபாரத கதைக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு

பிராமணரின் இல்லத்தில் விருந்தினர்களாக பாண்டவர்கள் தங்குதல்:

பாண்டவர்களும் அவர்களின் தாயான குந்தி தேவியும் அரக்கு மாளிகையில் இருந்து தப்பி, ஒரு இடத்தில் இருந்து மற்றொருக்கு இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஏகசக்கரம் என்னும் ஒரு அமைதியான கிராமத்தை வந்தடைந்தனர். அங்கே அவர்களுக்கு கருணையுடன் அடைக்கலம் அளித்த ஒரு பிராமண கிராமவாசியின் குடிசையில் அவர்கள் தங்கினார்கள். அந்த பிராமணனுக்கு ஒரு மூத்த மகளும், ஒரு சிறிய மகனும் இருந்தனர். சில காலம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் கழிந்தது.

இதையும் படியுங்கள்: செல்வராகவன் நடிப்பில் வெளியாகும் பகாசூரன் பாடல் இன்று வெளியாகியது

பிராமண பெண்ணின் அழுக்குரல்:

ஒரு நாள் பிராமணனின் வீட்டில் இருந்து அழுகுரல் ஒன்றை குந்தி தேவி கேட்டார். என்ன நடக்கிறது என்பதை பார்க்க வீட்டிற்குள் விரைந்தார். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக இருந்தனர். தான் இந்த குடும்பத்தின் தலைவன் என்பதால் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதால், தான் உயிரை விடுவது தான் சரி என பிராமணன் கூறினார். ஆனால் குடும்பத்தின் நன்மைக்காக தான் உயிரை விடுவது தான் சரி என அவரின் மனைவி வாதாடி கொண்டிருந்தார்.

 

இவர்களை குறுக்கிட்ட அவர்களின் மகள், தான் உயிரை கொடுப்பது தான் சரி என கூறினால். அதேப்போல் அவரின் மகனும் தன் உயிரை கொடுக்க முன் வந்தான். இந்த உரையாடலுக்கு பின்னணியில் இருந்த காரணத்தை குந்தி தேவியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அமைதியாக உள்ளே வந்த அவர், நடந்ததை விளக்குமாறு பிராமணனிடம் கோரினார்.

பகாசுரனை பற்றி பிராமணர் விளக்குதல்:

பகாசுரனின் கதையை அவர் கூற ஆரம்பித்தார். அந்த ஊரின் அரசன் ஒரு அரக்கனிடம் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தார். அதன் படி, அந்த அரக்கனுக்கு அந்த கிராமத்தில் இருந்து ஒருவர் மூட்டைக்கணக்கான உணவை கொண்டு செல்ல வேண்டும். அந்த அரக்கன் அந்த உணவுடன் சேர்த்து அந்த கிராமவாசியையும் உண்டு விடுவான். இதே முறையில் பல கிராமவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போது, இந்த மாதத்திற்கு வந்துள்ளது அந்த பிராமண குடும்பத்தின் முறையாகும். அவர் குடும்பத்தில் இருந்து ஒருவர் அந்த அரக்கனுக்கு உணவை கொண்டு செல்ல வேண்டும். அப்படியே தன்னையும் அந்த அரக்கனுக்கு பலி கொடுக்க வேண்டும். இதனை கேட்ட குந்தி தேவி, “என் மகன் பீமன் உங்களுக்கு கண்டிப்பாக உதவிடுவான். உங்கள் மகனின் இடத்தில் அவன் செல்வான்.” என கூறினார்.

ஆனால் இதனை அந்த பிராமணனின் மனைவி ஒப்புக் கொள்ளவில்லை. “ஐயோ இல்லை! உங்கள் மகனை சாகடிக்க நான் சம்மதிக்க மாட்டேன். நீங்கள் எங்கள் விருந்தாளிகள்” என அவர் கூறினார். “பயம் கொள்ளாதீர்கள்! என் மகன் பீமா இதற்கு முன் பல அரக்கர்களை அழித்துள்ளான். அவன் பத்திரமாக மீண்டும் வருவான்” என குந்தி தேவி கூறினார். பாண்டவர்கள் வீடு திரும்பியவுடன், அந்த அரக்கனை பற்றியும், தான் அளித்த வாக்குறுதி பற்றியும் குந்தி தேவி கூறினார். பகாசுரானுக்கு உணவு எடுத்துச் செல்ல பீமன் ஒப்புக் கொண்டான். அரிசி, பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் இனிப்புகள் அடங்கிய வண்டியை தள்ளியபடியே பீமன் புறப்பட்டான்.

பகாசுரனுக்கு உணவு வண்டியை பீமன் எடுத்து செல்லுதல்:

காட்டை அடைந்த பீமனால் பகாசுராவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தான். வெகு விரைவிலேயே பசி எடுத்ததால் வாழைப்பழங்களை உண்ண ஆரம்பித்தான். சற்று நேரத்தில் அனைத்து வாழைப்பழங்களும் தீர்ந்தன. பின் சாதத்தையும், பின் பழங்களையும் இனிப்புகளையும் சாப்பிட்டான். அந்த அரக்கன் தோன்றிய போது, அனைத்து உணவுகளையும் பீமன் தீர்த்தே விட்டான். கடும் கோபத்தில் பார்த்த பகாசுரனுக்கு விசித்திரமான அலகு இருந்தது. வெறும் வண்டியை பார்த்த போது அவன் கடும் கோபத்தை அடைந்தான். பீமனை நோக்கி வேகமாக வந்த அவன், “என்ன தைரியம் உனக்கு” என கூச்சலிட்டான். ” என் உணவை எப்படி நீ உண்ணலாம்? எனக்கு பசிக்கிறது.” என கத்தினான்.

அரக்கனான பகாசுரனும் பீமனும் சண்டையிடல்:

பீமன் மீது தீராத ஆத்திரமும் போபமும் கொண்ட பகாசுரன் பீமனை தாக்க பாய்ந்து வந்து தாக்கினான். பீமன் அதற்கு அஞ்சாமல் நிமிர்ந்து நின்றான். பகாசுரன் அடர்ந்த காட்டு பெரிய மரங்களை தூக்கி பீமன் மீது வீசினான். அதனையும் பீமன் தன் கைகளால் தடுத்து தள்ளிவிட்டான். என்னை எதிர்க்க என்ன உனக்கு திமீரடா உனக்கு என அரக்கன் பீமனை தாக்கினான்.

அனைத்து தாக்குதலையும் முறியடித்தவனாக காணப்பட்ட பீமன் பகாசுரனை தன் உரல் போன்ற கைகளால் தாக்கி அவனை உணவுகளை எடுத்த எடுத்து வந்த வண்டியில் கயிற்றால் கட்டி அந்த கிராமத்தின் முச்சந்திக்கு எடுத்து சென்றான். அவனை அங்கேயே பீமன் பகாசுரனை அழித்தான். இந்த நிகழ்வை கண்ட கிராம மக்கள் பீமனை கொண்டாடினர். அவரின் தாயான குந்திதேவிக்கு கிராம மக்கள் வணக்கம் செலுத்தி நனறி தெரிவித்தனர்.

இது போன்ற இதிகாசங்கள் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், உடல்நலம், நகைச்சுவை, தமிழ் இலக்கியம், செய்திகள், விளையாட்டுகள், சினிமா போன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here