தளபதி 67 படத்தின் மாஸ் டைட்டில் ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு திரைப்படம் வெளியாகும் தேதியும் வெளியீடு.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் 25 நாட்களை கடந்து உலகமெங்கும் சிறப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதுவரை இப்படம் 250 கோடியை தாண்டி வசூல் செய்து வந்துள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதன் முறையாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் பிரபு, சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தாண்டின் பொங்கல் ரிலிசாக வெளியாகி அனைவரையும் கவர்ந்து வசூலிலும் வெற்றி பெற்று வந்துள்ளது. இதணை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முற்றிலும் லோகேஷ் கனகராஜின் LCU வடிவத்தில் உருவாகி வருகிறது.
உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியாக அமைந்த நிலையில் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்ரம் படத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களும் இப்படத்திலும் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய்க்கு இறுதியாக பீஸ்ட் படத்தில் இணைந்திருந்த அனிருத் இப்படத்தில் இணைந்துள்ளார். விக்ரம் படத்திலும் இவரே இசையமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் 67 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். இவர் விஜயுடன் இணைந்து நடிப்பது இது 5வது முறை. மேலும், அர்ஜின், முதன் முறையாக இப்படத்தின் மூலம் நடிக்கவுள்ள சேன்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மேலும், படத்தின் டைட்டில் புரொமோ வீடியோவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியாக மாலை 5.00 மணிக்கு டைட்டிலுடன் கூடிய ப்ரோமோ வெளியாகி வைராலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: துணிவு படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்
விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோவை போல அமைந்துள்ளதாக கூறுகின்றனர். படத்தின் பெயர் லியோ இந்த ப்ரோமோவில் விஜய் BLOODY SWEET என்று கூறுகிறார். இதுவும் டிரண்டிங்காகி வருகிறது. இந்த படம் இந்தாண்டு 13.10.2023 அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.