நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் பிரபலமான கதாபாத்திரத்தில் அதிலும் அனைவரையும் கவரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்திக். அப்படத்தில் வரும் பொன்னி நதி பார்க்கனுமே பாடல் மிக பிரபலம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இருப்பினும், கார்த்திக் நடித்துள்ள கேரக்டர் அனைவரும் எதிர்பார்க்கும் கதாபாத்திரமாக இருக்கும் என சினிமா விமசகர்களால் கூறப்பட்டது. அதிலும் இவர் தான் அப்படத்தில் நிறைய காட்சிகளில் வருவார் போலவும் தெரிகின்றது. இப்படத்தின் பிரோமோஷனுக்கு இந்தியா முழுவதிலும் பல இடங்களுக்கு படக்குழுவினர் சென்று வந்துள்ளனர்.
இதன் இடையே இப்படம் இன்று உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் 1 படத்தின் இடைவேளையில் கார்த்திக் நடித்த சர்தார் படத்தின் டீசர் ரசிகர்களுக்கு வெளியாக உள்ளது. கார்த்திக் ரசிகர்களிடேயே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: தஞ்சை கோவிலுக்கு வேண்டிய பாராட்டு இன்னும் கிடைக்கவில்லை-ஆனந்த மகேந்திரா
விருமன் திரைப்படம் கிரமாத்தை சார்ந்த கதை களத்தை பெற்றாலும் திரையரங்குகளில் நல்ல வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. தந்தை மகன் சென்டிமெண்ட் காட்சிகளாக இருந்தாலும் அனைவரையும் அப்படம் கவர்ந்தது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து வெற்றி கொடியை நாட்டி வருகின்றார்.
தற்போது, இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தியின் சர்தார் படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி வயதான மற்றும் காவல் அதிகாரியாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனுஷை போல கார்த்தியும் தொடர் வெற்றிகளை குவிக்க போகிறார் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து டீசரை புகழ்ந்து வருகின்றனர்.