நடிகர் ஆர்யா இயக்குனர் முத்தையா இணைந்துள்ள படத்தின் டைட்டில் வெளியானது. ஆர்யா 34 என்ற பெயரில் படக்காட்சிகள் நடந்து வருகின்ற தருணத்தில் தற்போது அப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
மதுரையை தன் படத்தின் மூலமும் கிராமங்களை சார்ந்தும் குடும்ப பின்னணியை சார்ந்தும் படத்தை எடுத்து அதில் வெற்றி பெற்றும் வருபவர் இயக்குனர் முத்தையா. தற்போது ஆர்யாவை வைத்து படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகன சித்திஇதானி நடித்துள்ளார்.
ஜீ ஸ்டுடியோ மற்றும் டிரம்ஸ்டிக் புரோடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஓளிப்பதிவு பணிகளை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்யா தொடர்ந்து மாறுப்பட்ட பாத்திரங்களில் வித்தியாசமான படங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர் முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவராக இருந்து வருகிறார். இறுதியாக இவர் இயக்கிய விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா 34 என்ற பெயரில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது இந்த படத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளது. ”காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்” என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழுவின் மூலம் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், ஆர்யா சாயிஷா இருவரும் காதல் திருமணம் 2019ம் ஆண்டு செய்து கொண்டனர். அவர்களுக்கு ஓரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. சாயிஷா ஜெயம் ரவி படமான வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார் அப்போது இருந்தே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணமும் முடிந்து குழந்தையும் பிறந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிடப்பட்டது அது மிக வைரலானது.
இதையும் படியுங்கள்: பாபா ரீ-ரிலிசை அடுத்து மற்றுமொரு படத்தை ரீரிலிஸ் செய்ய முடிவு
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.