பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஆயிஷா

0
15

பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஆயிஷா. BIGG BOSS சீசன் 6 விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 68 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இதில் பலகட்ட பிரச்சனைகள் சண்டைகள் என அனைத்தும் வந்த போதிலும் கலங்காமல் தான் இருப்பது சரி என்று ஆணித்தனமான விளையாட்டை தன் உண்மையான கேரைக்டர் மூலம் தொடர்ந்து காட்டி வரும் ஷிவின் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று 60 நாட்கள் ஹவுஸ்மெட்களுடன் இருந்த ஆயிஷா தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் டைட்டில் வின்னர் அரசியல்வாதியும் சமூக அக்கரையும் கொண்ட விக்ரமன் தான் என நடிகையும் பிஜபியின் விசுவாசியுமான காயத்திரி ரகுராம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரையும் தாண்டி ஷிவின் நன்றாக விளையாடி வருவதை சுட்டி காட்டினார் ஆயிஷா.

பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஆயிஷா

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஓன்று பிக்பாஸ் இந்த பிக்பாஸ் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசன் இப்போது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதன் முறையாக 21 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஓவ்வொரு வாரமும் ரசிகர்கள் தரும் குறைந்த ஓட்டுகளின் அடிப்படையில் ஓருவர் அல்லது இருவர் எலிமினேட் செய்யப்படுவார். கடந்த வாரம் இருவர் எலிமினேட் செய்யப்படுவர் என்று முன்பே தெரிவிக்கப்பட்ட நிலையில் இறுதியில் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்பட்டார்.

முதலாதாக முத்து, அசல் கோலார், சாந்தி, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி இறுதியாக ராம், ஆயிஷா வெளியேறியுள்ளனர். இந்நிலையில் டாஸ்க்குகள் விறுவிறுப் படைந்துள்ளன. இந்த வார டாஸ்க் சொர்கவாசிகள் நரகவாசிகள் இதில் சண்டைகளும் சச்ரவுகளும் நடந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், வரும் ஞாயிறு அன்று ஜனனி அல்லது ஏடிகே வெளியேற்றப்படலாம் என கருத்துகள் வந்துள்ளது. இந்த நிலையில், இந்த சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுபவர் ஷிவின் தான் என ஆயிஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: BIGG BOSS 6: இந்த வாரம் வெளியேறப்படுபவர் யார் தெரியுமா?

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here