பாபா ரீரிலிஸ் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

0
10

பாபா ரீரிலிஸ் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் எழுதிய கதை தான் இந்த பாபா அப்போது சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது அனைவரும் விரும்பும் காரணத்தால் அதை ரீரிலிஸ் செய்து டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

பாபா 2002 ஆம் ஆண்டு ரமேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியது. இந்த படத்தின் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இவர்களுடன் ஆஷிஷ் வித்யார்த்தி, கவுண்டமணி, நம்பியார், விஜயக்குமார், சாயா ஷிண்டே மேலும் பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ஓளிப்பதிவு சோட்டா. கே. நாயுடு செய்திருந்தார். இப்படத்தின் கதையையும் தயாரிப்பையும் ரஜினிகாந்த் செய்திருந்தார்.

தற்போது, வருகின்ற 12ம் தேதி அவரின் பிறந்தநாளில் இப்படம் உலகமெங்கும் ரீரிலிஸ் ஆக உள்ளது. 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்படத்தினை டிஜிட்டல் முறையில் அனைத்தையும் மாறறியுள்ளனர். கலரிங், சவுண்ட் சிஸ்டம் என அனைத்தையும் சரிப்படுத்தி மேலும் மெருகேற்றி சில காட்சிகள் நீக்கப்பட்டு சிறப்பான முறையில் வெளியாக உள்ளது.

பாபா ரீரிலிஸ் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

ரஜினி பாபா மீது அளவற்ற வழிபாடை வைத்துள்ளவர். அதனால் அவர் அடிக்கடி இமயமலை சென்று தியானம் மற்றும் வழிபாடு இன்றளவும் நடத்தி வருகிறார். அதன் காரணமாக அவருக்கு தோன்றிய கதை அம்சத்தை படமாக எடுக்க ஆசை கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

இதையும் படியுங்கள்: மாபெரும் காமெடி தர்பாரில் உருவாகியுள்ள வரலாறு முக்கியம் என்ற படம்

தற்போது, இப்படம் ரீரிலிஸ் ஆவதை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்ப்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பாபா ரீரிலிஸ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை இப்போது உள்ள ரசிகர்களும் காண ஆர்வமாக இருப்பதை அறிய முடிகிறது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here