அவதார் படத்தின் 2ம் பாகத்தின் டீரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது

0
5

அவதார் படத்தின் 2ம் பாகத்தின் டீரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. THE WAY OF WATER என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

2009 ம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் காட்சியமைப்புடன் உருவான படம் அவதார் இப்படம் உலகம் மழுவதிலும் பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது. கடந்த 13 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி டிசம்பரில் வெளியாக காத்திருக்கின்றது. இதனால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

த வே ஆஃப் வாட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 160 மொழிகளில் வெளியாக காத்திருக்கின்றது. முழுவதுமாக 3D வடிவமைப்பில் பிரம்மாண்ட முறையில் காட்சிகள் நிறுவப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

அவதார் படத்தின் 2ம் பாகத்தின் டீரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது

இப்படத்தை இயக்கியவர் பிரபல ஜேம்ஸ் கேம்ரூன். இப்படத்தில் சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, கேட் வின்ஸ்லெட், ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது அவதார் தி வே ஆஃப் வாட்டர்.

இதையும் படியுங்கள்: விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கிலும் பொங்கலுக்கு வெளியாகிறது

இப்படத்திற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமிக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், விறுவிறுப்பு, சுவாரசியம், ஆக்ஷன் காட்சிகள், சென்டிமெண்ட் என அனைத்தையும் விருந்து படைக்கும் இப்படம் வசூலையும் வாரிக் குவிக்கும் என்பதில் எந்த ஓரு மாற்றமும் இல்லை.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here