ஹாலோகிராம் மூலம் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் துணிவு டிரைலர்

0
12

ஹாலோகிராம் மூலம் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை துணிவு படத்தின் டிரைலர் பெறவுள்ளது. 

உலகளவில் ஹாலோகிராம் மூலம் வெளியிடப்பட உள்ள முதல் இந்திய திரைப்படத்தின் டிரைலர் என்ற பெருமையை பெறவுள்ளது துணிவு படத்தின் டிரைலர். மலேசியாவில் Kulala Lumpur City Centre என்ற இடத்தில் இன்று இரவு 11 மணிக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள படம் துணிவு இப்படத்தை எச்வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பு பணிகளை போனி கபூர் செய்துள்ளார். ஜூப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்க உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

அஜித்துடன் வினோத் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் இணைந்து மாபெரும் வெற்றி தந்துள்ளனர் இந்த நிலையில் இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்து இவர்களது கூட்டணிக்கு துணை நிற்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஹாலோகிராம் மூலம் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் துணிவு டிரைலர்

துணிவு படத்தின் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டார் போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று தொடர்ந்து எந்த படமும் அறிவிக்காத புதிய முறையில் படக்குழு இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் புகைப்படத்துடன் வெளியிட்டு அவர்களின் கதாபாத்திரங்களின் பெயரை வெளியிட்டது.

அதனுடன் இன்று மாலை 7 மணிக்கு துணிவு படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் அனைவரும் காத்திருக்கவும் எனவும் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து மாஸ் அப்டேட்களை வழங்கி வரும் படக்குழு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கி வருகிறது. இந்த படம் வருகிற பொங்கல் திருவிழாவிற்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே பொங்கல் திருவிழாவின் போது விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாவதால் இரு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆராவாரமும் வரவேற்பும் இருந்து வருகிறது.

இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் டிரைலர் இந்திய திரைப்படங்களில் முதன் முறையாக ஹாலோகிராம் வசதியுடன் மலேசியாவில் இன்று இரவு 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதனால் உலக சாதனை படைக்க இருக்கும் துணிவு டிரைலர் என ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: துணிவு படத்தின் கதாபாத்திரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு படக்குழு அசத்தல்

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here