விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபார்ஸி படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது

0
18

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள ஃபார்ஸி (Farzi) திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளதை தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் Vijay sethupathi எந்த வகையான கதாபாத்திரத்திலும் நடிக்க ஓப்புக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ள அவர் தமிழ் சினிமாக்களில் தனக்கென்று ஓரு இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த கடைசி விவசாயி படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் கமலஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இறுதியாக பொன்ராம் இயக்கத்தில்  கடந்த டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டிஎஸ்பி’. அனுக்ரீத்தி வாஸ், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபார்ஸி படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது

படம் வெளியான முதல் நாளே எதிர்மறை விமர்சனங்கள் வரத்தொடங்கின. இதனால் திரையரங்குகளில் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கியுள்ள தொடர், ‘ஃபார்ஸி’. க்ரைம் த்ரில்லர் தொடரான இதில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா, புவன் அரோரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை தனது சமூக வலைதள கணக்கின் மூலம் அறிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்: AK 62 படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி காமெடியானாக சந்தானம் இணைந்துள்ளனர்

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here