கருணையே வடிவான வள்ளாலாருக்கும் தைப்பூசத்திற்கும் உள்ள ஓற்றுமை. ஜீவகாருண்யமே கடவுளை அடைய வழி என நாளும் மனிதனின் பசி நீக்குவதே முதன்மையான தயவு என்று போற்றியவர் வள்ளாலார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர், ஜீவகாருண்யமே மோச்சத்தின் திறவுகோல் என்றும் நாளும் போதித்த மனித உருவில் தோன்றிய மகான். இந்த பூவுலகில் பசியே மனிதனின் முதன்மையான பிரச்சனை அந்த பசியை நீக்குவதே தலையாய கடமை என்று கூறியும் முருகனை தன் குருவாக நினைத்து பாடியவர் வள்ளாலார். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தைப்பூசத்தன்றே வடலூரில் சத்ய ஞான சபையில் தீப ஓளியில் இரண்டரக் கலந்தார்.
இதன் காரணமாகவே ஆண்டுதோறும் வருகின்ற தைப்பூசத்தன்று வடலூரி சத்ய ஞான சபையில் ஆறு திரைகள் அகற்றப்பட்டு ஏழாவது திரையில் தீப ஜோதி காண்பிக்கப்படுகிறது. இந்த ஏழுத் திரைகளும் மாயை, ஆசை, பொறாமை, கோபம், பொய், கன்மம் போன்ற திரைகளாகிய தீய பழக்கங்களை அகற்றி ஏழாவதாக காணப்படும் கருணை என்ற திரையே தீப ஜோதியாக மறுமை வாழ்வை அகற்றும் விதமாக காட்டப்படுகிறது.

கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது.
மனித உருவில் வாழ்ந்த கடவுளராக பார்க்கப்படுவதால் தான் அவரை கடவுளாக பல மக்கள் வணங்கி பலர் அவர் வாழ்விவை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த அகண்ட உலகில் மிகப்பெரிய நோயாக, தீராப் பிரச்சினையாக, பிணியாக இருப்பதே பசி. எல்லோர்க்கும் உணவு, எல்லா உயிரினங்களும் பசியாற வேண்டும் என்பதையே லட்சியமாக, குறிக்கோளாக, பிரார்த்தனையாகக் கொண்டவர் வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார்.
”அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெரும் ஜோதி” என்று ஜோதியில் வள்ளல் பெருமான் தைப்பூசத்தினத்தன்று ஜோதி வடிவாக இரண்டர கலந்தார். அதனை முன்னிட்டு வடலூரில் இந்த தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: 2023 தைப்பூச திருநாள் மற்றும் அதன் மகிமையும் முழு விவரம்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.