ஜெயிலர், இந்தியன் 2 இரு படங்களின் அப்டேட்டும் வளைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது

0
10

ஜெயிலர், இந்தியன் 2 இரு படங்களின் அப்டேட்டும் வளைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

ரஜினிகாந்த்தும் கமலும் திரைவுலகின் மிக பெரும் ஜாம்பாவான்கள் இவர்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜெயில்ர் மற்றும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்கள் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை ரசிகர்கள் சமூக வளைதளங்கள் வாயிலாக கொண்டாடி டிரன்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் தீலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. இப்படத்தில் மாறுபட்ட கதை அம்சத்தில் ரஜினி நடிப்பதாக தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்ற தகவலும் இன்று வெளியாகி உள்ளது.

கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பல முன்னனி நடிகர்களும் கமிட் ஆகியுள்ளனர். மேலும், மலையாள நடிகர் விநாயகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மலையாள நடிகர் விநாயகன்.

ஜெயிலர், இந்தியன் 2 இரு படங்களின் அப்டேட்டும் வளைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது

அதன்பிறகு மரியான் உள்ளிட்ட ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தார். அதேசமயம் மலையாளத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விநாயகன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கம்மட்டிப்பாடம் என்கிற படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார் விநாயகன்.

இந்தியன் 2 வின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. விக்ரம் படத்தின் மிக பெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் மீண்டும் இந்தியன் தாத்தாவாக மிரட்ட வரவுள்ளார் கமல். லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு மிக பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்விரு ஜாம்பாவான்களின் படங்களின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதை ரசிகர்கள் டிரன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here