புவா நொய் கொரில்லா: பேங்காக்கில் உள்ள என்ற Peta உயரமான ஷாப்பிங் மாலில் உள்ள Zooவில் தான் ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட புவா நொய் என்ற ஆண் கொரிலா ஒன்று உள்ளது. இதற்கு ஒரு வயதாக இருக்கும்போதே அதாவது 1990ம் ஆண்டு முதலே அடைக்கப்பட்டிருக்கிறது. புவா நொய் என்றால் சிறிய தாமரை என்று பொருளாம். ஆரோக்கியமான ஒரு கொரில்லாவின் வாழ்நாள் 35 முதல் 40 ஆண்டுகள் என்று கூறப்பட்டு வரும் நிலையில் புவா நொய் கடந்த 32 வருடங்களாக தனது வாழ்நாளை சிறையிலேயே கழித்துவிட்டது. அதன் இறுதி காலத்திலாவது அதற்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக அந்த ஷாப்பிங் மாலின் உரிமையாளரிடம் பீட்டா அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதற்கு இணையாக அவர் 30 மில்லியன் தாய் பாட் அதாவது இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் கேட்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசியுள்ள தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் வரவுத் சில்பா ‘புவா நொய் தனி நபரின் சொத்தாக கருதப்படுவதால் இதில் தலையிட முடியாத நிலையில் இருக்கிறோம். ஏனெனில் அது ஒரு வயதாக இருக்கும் போதே 3மில்லியன் தாய் பாட்டிற்கு வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் புவா நொய் கொரில்லாவை விடுவிக்க அதன் உரிமையாளர் கேட்ட தொகையை திரட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தொகை சற்று பெரியதாக இருப்பதால் திரட்டுவது சிரமமாக உள்ளது. அதே சமயத்தில் கொரில்லாவை விற்பதாக அதன் உரிமையாளர் விலங்குகள் நல அமைப்பில் ஒப்புக் கொண்டாலும் மேலும் மேலும் தொகையை அதிகப்படுத்தி வருகிறார். விரைவில் இதற்கான தீர்வு காணப்படும்’ என்று அவர் தெரிவித்தள்ளார்.