மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 19 லட்சம் கட்டணம் செலுத்தி 7 நாட்கள் பயணித்த இளைஞர் தன் அனுபவங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அரசு ரயில்வேவை மேம்படுத்தும் நோக்கிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பணக்காரர்களை ஈர்க்கும் வகையிலும் உயர்ரக எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. அதற்காக உயர்தர அளவில் மேம்படுத்தப்பட்ட ரயில் சேவையை மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்துள்ளது.
இதில் மிக அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் தங்கத் தட்டில் உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கு இயக்கப்பட்ட இந்த ரயில் தென்தமிழகத்திற்கு பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

எளிமையானவர்களுக்கு வரப்பிரசாதம் போல் விளங்கும் ரயில் பயணங்கள் வாயிலாக நடுத்தர குடும்பம் முதல் பணக்காரர்கள் வரை குளிர்சாதனப் பெட்டி முதல் புக்கிங் இல்லாத பயணிகள் வரை இந்த ரயிலை பயன்படுத்துவர். இந்நிலையில் சொகுசு சுற்றுலா மூலம் இந்திய சுற்றுலா பயணிகளை கவர முடியும் என்று நோக்கிலும் ரயில்வேக்கு நல்ல லாபம் ஈட்டும் நோக்கிலும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிநபர் சேவை வழக்கப்படுகிறது. பயணிகளுக்கு சொகுசு அறை, தனி நபர் பார், குளிர்சாதன வசதி, வைபை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
இந்த ரயிலில் குஷாக்ரா என்ற இளைஞர் ரூ.19 லட்சம் கொடுத்து பயணித்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்திய ரயில்வேயில் இதுபோன்ற ஒரு ஆடம்பர பயணத்தை அனுபவித்ததுண்டா என்று கேள்வி எழுப்பி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: என் குடும்பத்திலும் ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது- கங்கனா ரணாவத்
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் பலவித கமேண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.