பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை இல்லை-மா.சுப்பிரமணியன்

0
13

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை இல்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரியாகி விடும் காய்ச்சலுக்கு எப்படி வடுமுறை அளிக்க முடியும்? மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இரும்பல் என மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சலுக்கு ஆளாவோரில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் மற்றும் குழந்தைகளாக இருப்பதால், அவர்களின் உடல்நலம் கருதியும், வைரஸ் தொற்று மேலும் தீவிரம் அடையாமல் இருக்கவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை இல்லை-மா.சுப்பிரமணியன்

‘தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சலால் இதுநாள்வரை 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 240 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட லேண்டிய சூழ்நிலை தற்போதைக்கு இல்லை’ என்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தெரிவித்திருந்தார்.

ஆனால், காய்ச்சலுக்கு ஆளாகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால், இது மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த கோரிக்கைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். “பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது. முதல்வர், சுகாதாரத் துறை மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தோசித்துதான் உரிய முடிவெடுக்க இயலும்” என்று அமைச்சர் அன்பின் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலத்தில் பரவிவரும் காய்ச்சலை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 -9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 17 -25 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு லீவு விடப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here