தமிழ் இலக்கணத்தில் திணை: திணை என்றால் ஓழுக்கம் என்று பொருள். மேலும், திணை என்பது ஓழுக்கம், பிரிவு, குலம், நாகரீகம், இனம் என பல பொருள் ஓரு சொல்லாக காணப்படுகிறது.
தமிழ் இலக்கணமான தொல்காப்பியரின் சொல்லதிகார நூலில் திணை என்பதன் பொருளாக பிரிவு என்று குறிப்பிடுகிறது. இந்த திணை இருவகைப்படும். அவை உயர்திணை, அஃறிணை.
உயர்திணை:
உயர்திணையாவன, மனிதரும், தேவரும், நரகரும் ஆகிய ஆறறிவு உடையன உயர்திணை என்று பொருள் கொள்ளலாம்.
அஃறிணை:
அஃறிணையாவன மனிதர் அல்லாத உயிர் உள்ள உயிர் அற்ற மரம், செடி, கொடி என இலக்கண நூல்கள் வகைப்படுத்துகிறது.

பால்:
பெயர்ச்சொற்கள் பால் அடிப்படையில் ஐந்து வகைப்படும்.
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- பலவின் பால்
- ஓன்றன் பால்
அவன், வந்தான் – உயர்திணையாண்பால்
அவள், வந்தாள் – உயர்திணைப் பெண்பால்
அவர், வந்தார் – உயர்திணைப் பலர்பால் அது, வந்தது – அஃறிணையொன்றன்பால் அவை, வந்தன – அஃறிணைப் பலர்பால்
தெரிந்து கொள்க: ஓளவையாரின் ஆத்திச்சூடி பாடலின் விளக்கம்
இடம்:
இவ்விரு திணையாகிய ஐம்பாற்பொருளை உணர்த்துஞ் சொற்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் மூவிடத்தையும் பற்றி வரும்.
எண்:
ஓருமை, பன்மை என்ற அடிப்படையில் பெயர் சொற்களை வகைப்படுத்துதல் எண் எனப்படும்.
ஓருமை:
அவன், ரவி, பூனை, வந்தது, வந்தான்
பன்மை:
அவர்கள், முதலீடுகள், விழாக்கள், புத்தகங்கள்
காலம்:
முக்காலமான இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்தை குறிக்கும்.