ஜாதக பொருத்தம் பார்த்தல் தமிழில்

0
79

ஜாதக பொருத்தம் பார்த்தல் தமிழில்: உலகில் ஓரு ஜனனம் நிகழும் போதே அவற்றின் விதி எழுதப்படுகிறதாக கூறப்படுகிறது. அதுபோல குழந்தை பிறக்கும் போதே ‘இந்நாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று‘ என்று அன்றே கூறியுள்ளனர். ஓரு ஆணோ பெண்ணோ பிறக்கும் போதே இவருக்கு இவர் தான் என்று அன்றே எழுதப்பட்ட உண்மையாக உள்ளது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் கூறுவதுண்டு. ஏனெனில், வாழ்வில் ஓருமுறை மட்டுமே நிகழும் என்பதனால் அதுமட்டுமல்ல திருமண பந்தத்தில் இணையும் மணமகன் மணமகள் என்றும் நிலைத்து ஓருவருக்கு ஓருவர் விட்டுக் கொடுத்து சென்று வாழ்க்கை என்னும் பெரிய பயணத்தில் எவ்வித சறுக்கல்களும் இன்றி வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை ஓற்றுமையாக குடும்பத்தை காக்கும் படகாக இருக்கவே இப்படி கூறி உள்ளனர் நம் முன்னோர்கள்.

அதனாலையே, ஆண் பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யப்படுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. ஓரு ஆணின் ஜாதகத்தோடு ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்துகிறதா என்பதைக் காணும் வழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்து வருகிறது. எனவே, ஜாதகப் பொருத்தம் காண்பது அவசியமாகிறது.

ஜாதக பொருத்தம் பார்த்தல் தமிழில்

ஜாதக பொருத்தம் பார்க்கும் முறைகள்:

பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஆண் மற்றும் பெண்ணின் குணநலன்களை ஆராய்ந்து பொருத்தங்கள் கணக்கிடபடுகிறது. நம் முன்னோர்கள் கடைபிடித்த இந்த மரபுகள் ஆண்டவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டது. பண்டைய காலத்தில் பல்வேறு பொருத்தங்கள் (20 பொருத்தங்கள்) பார்த்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் பத்து (10) பொருத்தங்கள் மட்டும் பார்க்கப்படுகிறது.

ஜாதகப் பொருத்தம் பார்த்தல் பல வகைகளில் காணப்படுகின்றது. ஒரு சிலர் பெயர் பொருத்தம் வைத்துப் பார்ப்பார்கள். சிலர் நட்சத்திரம் வைத்துப் பார்ப்பார்கள். பெரும்பாலோர் தசவிதப் பொருத்தம் பார்ப்பார்கள். மற்றும் பிறந்த தேதி, நேரம், மற்றும் பிறந்த இடத்தை வைத்தும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பார்கள்.

பொதுவாக ஜாதக பொருத்தம் பார்க்கும் பொழுது பெண் ஜாதகத்தை முதன்மையாக வைத்து ஆண் ஜாதகங்களை பொருத்தி பார்க்க வேண்டும். இப்பதிவின் மூலம் ஜாதக பொருத்தம் எப்படி பார்ப்பது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

இதையும் தெரிந்துகொள்ள: மனையடி சாஸ்திரம் பற்றி அறிவோம்

ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் திருமண பொருத்தம் பார்த்தல்:

ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் திருமண பொருத்தம் பார்க்க பெண் மற்றும் ஆணின் ராசி, நட்சத்திரம் மட்டும் போதும். நட்சத்திரங்கள் மற்றும் ராசி எண்ணிக்கை அடிப்படையில் இது கணக்கிடப்படும். மேலும் ராசிக்கான விலங்கு, கணம் முதலியவையும் கருத்தில் கொள்ளப்படும். இந்த முறையை தசவித பொருத்த முறை என்றும் கூறுவார்கள். இது பொதுவாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் காணப்படுகிறது.

பத்து பொருத்தங்களின் பெயர்கள்:

 • தினப் பொருத்தம் – Dina Porutham
 • கணப் பொருத்தம் – Gana Porutham
 • மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham
 • ஸ்ரீ தீர்க்க பொருத்தம் – Stree Dheerga Porutham
 • யோனி பொருத்தம் – Yoni Porutham
 • ராசி பொருத்தம் – Rasi Porutham
 • ராசியாதிபதி பொருத்தம் – Rasiyathipathi Porutham
 • வசிய பொருத்தம் – Vasiya Porutham
 • ரஜ்ஜி பொருத்தம் – Rajji Porutham
 • வேதை பொருத்தம் – Vethai Porutham

மேலும், பட்சிப் பொருத்தம், ஊர்ப் பொருத்தம், கூட்டாளிப் பொருத்தம், மரப் பொருத்தம், நாடி நட்சத்திரப் பொருத்தம், அஷ்ட வர்க்கப் பொருத்தம், நாட்டுப் பொருத்தம், ரேகைப் பொருத்தம் என இன்னும் சில பல பொருத்தம் காணும் முறைகளும் உள்ளன. இவை யாவும் தற்போது நடைமுறையில் இல்லை. தற்காலத்தில் தசப் (10) பொருத்தங்கள் மட்டுமே பார்க்கப்படுகிறது.

 1. தினப் பொருத்தம் (Dina Porutham) விளக்கம்:

தினப் பொருத்தத்தை நட்சத்திர பொருத்தம் என்றும் கூறலாம். இல்லறத்தில் தினமும் எலியும் பூனையுமாக இல்லாமல் ஓற்றுமையுடன் வாழ்க்கையை மேற்கொள்வதற்காக பார்க்கப்படுவது தினப் பொருத்தமாகும். இந்த பொருத்தத்தை கணக்கிடும் முறை.

பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து, ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வருவதை, ஒன்பதால் வகுக்கும் பொழுது ஈவு 2, 4, 6, 8, 9 என வந்தால் இந்த பொருத்தும் இருவருக்கும் உண்டு.

இந்த பொருத்தம் இல்லை என்றால் கணப் பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது.

கணப் பொருத்தம் (Gana Porutham) விளக்கம்:

ஜோதிட சாஸ்த்திரத்தில் மூன்று வகையான கணப் பொருத்தங்கள் உள்ளன. தேவ கணம், மனித கணம், ராட்ச்சஸ கணம். அனைத்து நட்சத்திரங்களும் இந்த மூன்று கணங்களுக்குள் ஒன்றாக தான் இருக்கும், ஒருவர் மீது ஒருவர் சகிப்பு தன்மை கொள்ளவே இந்த பொருத்தம் உள்ளது, இந்த பொருத்தம் இருப்பின் மற்றவரை சகித்து கொண்டு வாழலாம், ஆக தின சண்டை, பிரச்சனைகள் வராது. கணம் என்பதை குணம் என்று எடுத்து கொள்ளுங்கள்.

1. அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியவை தேவ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

2. பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை மனித கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

3. கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை ராட்சஸ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

ஓரு ஆண் அல்லது பெண்ணுக்கு தேவ கணம் என்றால் மணம் செய்யலாம். அதேபோல ஒருவர் தேவ கணம் மற்றொருவர் மனித கணம் என்றாலும் மணம் செய்யலாம்.

மகேந்திர பொருத்தம் (Mahendra Porutham) விளக்கம்:

மகேந்திர பொருத்தம் என்பது புத்திரர் அதாவது வம்ச விருத்தியை குறிக்கும். ஆண், பெண் ஜாதகத்தில் இருவருக்கும் மகேந்திர பொருத்தம் சரியாக இருக்க வேண்டும். ஜாதக கட்டத்தில் ஐந்தாம் வீடு, புத்திரகாரகர் குருபகவான் சிறப்பாக இருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை.

பெண் நட்சத்திரம் முதல், ஆண் நட்சத்திரம் முடிய கூட்டி வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமைந்தால், மகேந்திரப் பொருத்தம் உள்ளது எனலாம். இந்த பொருத்தம் சிறப்பாக இருந்தால் தான் புத்திர பாக்கியமும், புத்திரர்களால் செல்வமும், வளமும் உண்டாகும்.

ஸ்ரீ தீர்க்க பொருத்தம் (Stree Dheerga Porutham) விளக்கம்:

ஆண் பெண் நட்ச்சத்திரத்தை கூட்டம் பொழுது ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு. எனவே ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் எடுத்துக்  கொள்ளலாம்.

இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல செல்வங்களும் கிட்டும். இது பெண்ணின் ஆயுளுக்கு மிகவும் தேவையான பொருத்தமாகும்.

யோனி பொருத்தம் (Yoni Porutham) விளக்கம்:

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மிருகமாக கொள்ளபடுகிறது, அதன் படி இந்த பொருத்தம் கணக்கிடபடுகிறது. பகைமையல்லாத யோனி இருந்தால் பொருத்தம் உண்டு, பகைமையான மிருகங்கள் என்றால் யோனி பொருத்தம் இல்லை.

இல்லற சுகத்தை அடிப்படையாக கொண்டது இல்லறத்தில் ஆண் பெண் இருவரும் இன்பம் துன்பம் என அனைத்தையும் ஓரே சீரான முறையில் கையாள பயன்படுவது யோனி பொருத்தமாகும். இந்த பொருத்தம் இல்லை என்றால் வாழ்க்கை நல்முறையில் நடக்காது.

அசுவினி – ஆண் குதிரை
பரணி – ஆண் யானை
கார்த்திகை – பெண் ஆடு
ரோகிணி – ஆண் நாகம்
மிருகசீரிஷம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண் நாய்
புனர்பூசம் – பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ஆண் பூனை
மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்தரம் – எருது
அஸ்தம் – பெண் எருமை
சித்திரை – ஆண் புலி
சுவாதி – ஆண் எருமை
விசாகம் – பெண் புலி
அனுஷம் – பெண் மான்
கேட்டை – கலைமான்
மூலம் – பெண் நாய்
பூராடம் – ஆண் குரங்கு
உத்திராடம் – மலட்டு பசு
திருவோணம் – பெண் குரங்கு
அவிட்டம் – பெண் சிங்கம்
சதயம் – பெண் குதிரை
பூரட்டாதி – ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – பாற்பசு
ரேவதி – பெண் யானை

குறிப்பு இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
ஆகியவை ஜென்ம பகை என்பதால் சேராது.

ராசி பொருத்தம் (Rasi Porutham) விளக்கம்:

இரு குடும்ப உறவுமுறையை பற்றி கூறுவதாக உள்ள பொருத்தமாக பார்க்கப்படுகிறது. இந்த பொருத்தம் இருக்குமாயின் வம்சம் தழைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும்.

ராசியாதிபதி பொருத்தம் (Rasiyathipathi Porutham) விளக்கம்:

இருவீட்டாரின் சம்மந்திகளின் ஓற்றுமை வேண்டுமெனில் இப்பொருத்தம் இருத்தல் வேண்டும். கணவன் மனைவியின் ஓற்றுமையை பறைசாற்றுவனவாக உள்ள அதிபதி.

ராசி அதிபதிகள் நட்பு சமம் பகை
சூரியன் சந்திரன், செவ்வாய், குரு  புதன் சுக்கிரன், சனி
சந்திரன் சூரியன், புதன் செவ்வாய், குரு
சுக்கிரன்
சனி
இல்லை
செவ்வாய் சந்திரன், சூரியன், குரு சுக்கிரன்
சனி
புதன்
புதன் சூரியன், சுக்கிரன் செவ்வாய்
குரு
சந்திரன்
குரு சூரியன், சந்திரன், செவ்வாய் சனி சுக்கிரன் புதன்
சுக்கிரன் புதன், சனி செவ்வாய்
குரு
சூரியன், சந்திரன்
சனி புதன், சுக்ரன் குரு சூரியன், சந்திரன், செவ்வாய்

 

 

வசிய பொருத்தம் (Vasiya Porutham) விளக்கம்:

ஓருவர் மீதான ஓருவர் அன்பு மாறாமல் இருப்பதை குறிக்கும் பொருத்தம். விட்டுக் கொடுத்து செல்லும் மாண்பு மற்றும் சலிப்புகள் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதற்கு இப்பொருத்தம் அவசியமானதாக உள்ளது. ஓவ்வொரு ராசியும் அதற்கு ஏற்ற வசிய ராசியுடன் தான் பொருந்தும்.

பெண்ணின் ராசி எந்த ஆணின் ராசியுடன் பொருந்தும் என்பது கீழே கொடுக்க பட்டுள்ளது, மற்ற ராசிகள் பொருந்தாது.

மேஷத்திற்கு – சிம்மம், விருச்சகம்
ரிஷபத்திற்கு – கடகம், துலாம்
மிதுனத்திற்கு – கன்னி
கடகத்திற்கு – விருச்சிகம், தனுசு
சிம்மத்திற்கு – துலாம் மீனம்
கன்னிக்கு – ரிஷபம், மீனம்
துலாமிற்கு – மகரம்
விருச்சகதிற்கு – கடகம், கன்னி
தனுசுவிற்கு – மீனம்
மகரத்திற்கு – மேஷம், கும்பம்
கும்பத்திற்கு – மீனம்
மீனத்திற்கு – மகரம்

ரஜ்ஜி பொருத்தம் (Rajji Porutham) விளக்கம்:

பத்து வகையான பொருத்தங்களில் மிக முக்கியமானதாக உள்ள பொருத்தம். கணவன் மனைவி ஆயுளை பற்றியதாக உள்ளது. பத்து பொருத்ததில் 9 பொருத்தம் பொருந்தி உள்ளது ஆனால் ரஜ்ஜி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யமாட்டார்கள். அந்த அளவிற்கு மிக முக்கியமானது ரஜ்ஜி பொருத்தம். இது 5 வகையாக உள்ளது.

சிரோரச்சு

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்டரச்சு

ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோஹனம்
திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோஹனம்

உதாரரச்சு

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் – ஆரோஹனம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோஹனம்

ஊருரச்சு

பரணி, பூரம், பூராடம் – ஆரோஹனம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோஹனம்

பாதரச்சு

அசுவினி, மகம், மூலம் – ஆரோஹனம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோஹனம்

பொருத்த விபரம்

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.

ஒரே ரச்சுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் செய்யலாம் பொருத்தம் உண்டு.

வேதை பொருத்தம் (Vethai Porutham) விளக்கம்:

வாழ்வில் ஏற்படும் இன்பத்திலும் துன்பத்திலும் அனுசரித்து நடந்து கொள்ளும் பொருத்தமாக உள்ளது.

அசுவினி – கேட்டை
பரணி – அனுஷம்
கார்த்திகை – விசாகம்
ரோகிணி – சுவாதி
திருவாதிரை – திருவோணம்
புனர் பூசம் – உத்ராடம்
பூசம் – பூராடம்
ஆயில்யம் – மூலம்
மகம் – ரேவதி
பூரம் – உத்ரட்டாதி
உத்திரம் – உத்ரட்டாதி
அஸ்தம் – சதயம்

இந்த பத்து பொருத்தங்களில் மிகவும் முக்கியமாக தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜி, வேதை ஆகிய ஆறு பொருத்தங்கள் மிகவும் முக்கியம்.
சிலர், தினம், கணம் ஆகியவற்றில் ஒன்றும், மகேந்திரம், ராசி, நாடி ஆகியவற்றில் ஒன்றும்,
ரஜ்ஜி, வேதை யோனி ஆகிய மூன்றும் இருந்தால் இருந்தால் மட்டும் போதும் என்று திருமணம் செய்கின்றனர்.
அனைத்து பொருத்தங்களை காட்டிலும் ரஜ்ஜி பொருத்தம் என்பதே மிகவும் முக்கியமானது, ரஜ்ஜு பொருத்ததில் பல வகைகள் உள்ளன. அவற்றை முழுமையாக பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும்.

ஆன்மீகம், ஜோதிடம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here