பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் மிக பிரபலமாக ஓளிபரப்பாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து பல எப்பிசோடுகளை கடந்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற நாடகமாகும். அந்த நாடகத்தில் கதிரின் மனைவியாக வரும் முல்லை என்ற கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வந்தார். தற்போது அந்த நாடகத்திலிருந்து விலகுவதாக தனது இன்ஸ்டா மூலம் அறிவித்துள்ளார்.
விஜய் டிவியில் 2018 முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நாடகம் பல ஆண்டுகளாக ஓளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்த நாடகத்திற்கு பல இல்லத்தரசிகள் விரும்பிகளாக உள்ளனர். இந்தத் தொடர். ஸ்டாலின், சுஜிதா, குமரன், காவியா, ஹேமா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சகோதரர்கள் நான்கு பேர் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பாகப் பார்த்துக் கொள்கிறார். தனது கணவரின் தம்பிகளை தன் குழந்தைகள் போல கவனிக்கிறார். இந்த நிலையில், இந்தக் குடும்பத்திற்கு மீனா, முல்லை என மேலும் இரண்டு மருமகள்கள் வருகிறார்கள். குடும்பத்தின் அமைதி நீடிக்கிறதா என்பதுதான் இந்தத் தொடரின் அடிப்படையான கதை.

இந்தத் தொடரில் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றாக உள்ளது முல்லையின் பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். இவரையும் இவருக்கு ஜோடியாக நடித்த கதிரையும் பார்ப்பதற்காகவே பலரும் இந்தத் தொடரைப் பார்த்தனர். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.
அதற்கு பிறகு சித்ராவிற்கு பதில் யார் நடிக்க போவது என்ற எதிர்பார்ப்பும் நிவவி வந்தது. இந்நிலையில், முல்லை கதாபாத்திரத்திற்கு காவியா அறிவுமணி நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இவரது நடிப்பு பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது இருப்பினும் தற்போது, இவரை அனைவருக்கும் பிடித்து விட்டது. இவர் இதற்குமுன் பாரதி கண்ணாம்மா நாடகத்தில் நடித்து வந்தவர்.
தற்போது, அவர் திரைப்படம் ஓன்றில் நடிக்க இருப்பதால் இந்த நாடகத்தில் இருந்து விலகுவதாக தகவல் வந்துள்ளது. அதனால், இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதை உறுதி செய்துள்ளார் காவியா அறிவுமணி.
இந்த நாடகம் வெற்றிகரமான தொடராக அமைந்ததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் அந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இரு நாட்களுக்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்ட அவர், “14.09.2022 பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் முல்லையின் கடைசி நாள். இந்த அழகான பயணத்திற்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்.