பிக்பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேஷன் பற்றிய ப்ரோமா வெளியானது

0
11

பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஓடி கொண்டிருக்கின்றது. இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது 6 வது சீசனை நடத்தி வருகிறது. இந்த சீசனில் பல சுவாரசிய நிகழ்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் பற்றிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் முதன் முதலாக 20 நபர்கள் இறக்கப்பட்டனர். வொயில்டு கார்டு போட்டியாளராக மைனா நந்தினியும் களம் கண்டார். முதலாவதாக ஜி.பி. முத்து தான் இப்போட்டியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து வெளியேறினார். தொடர்ந்து, அடுத்த வாரங்களில் மெட்டி ஓலி சாந்தி வெளியேற்றப்பட்டார். மன்மத லீலையில் ஈடுப்பட்டு வந்த அசல் கோலாரை எலிமினேட் செய்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேஷன் பற்றிய ப்ரோமா வெளியானது

ஷெரினாவும் வெளியேற்றப்பட்டார் பின் நேற்று விஜே மகேஷ்வரியும் எலிவினேஷனில் வெளியேற்றப்பட்டார். இதனிடையே தற்போது இந்த வார எலிவினேஷன் லிஸ்ட்டில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ரக்‌ஷிதா, அமுதவாணன், மணிகண்டன் மற்றும் விக்ரமன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் ஃப்ரீ சோனில் உள்ளனர். அதனால் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர் யாரும் இந்த 4 நபர்களை எலிமினேஷனிற்கு நாமினேட் செய்யமுடியாது என்ற நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் 36-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோசை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற ஒவ்வொரு போட்டியாளர்களும் தலா இரண்டு நபர்களை தேர்வு செய்து கூறவேண்டும் என்று பிக்பாஸ் கூறினார்.

அதனை தொடர்ந்து கன்ஃபர்ஷன் ரூமிற்கு வந்த போட்டியாளர்கள் கூறும் பெயர்கள், ராபர்ட், நிவாஷினி, ஆயிஷா, ஜனனி, அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய பெயர்கள் தெரிவிக்கப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here