படம் பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கிவிட்டு வாருங்கள்-கௌதம் மேனன்

0
17

படம் பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கிவிட்டு வாருங்கள்-கௌதம் மேனன் வேண்டுகோள்.

வெந்து தணிந்தது காடு திரைப்படமானது நாளை வெளியாகிறது. இப்படத்தின் முதல் காட்சியானது அதிகாலை 5.00 மணிக்கு ஓளிபரப்பப்படுகிறது. அதனால் முதல் நாள் நன்றாக உறங்கிவிட்டு படத்திற்கு வந்து படத்தை பாருங்கள் என ரசிகர்களுக்கு அப்படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எந்த ஓரு படத்தின் கருத்தும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விட்டு வந்து ரசிகர்கள் தரும் கருத்திர்க்கு பெரும் வரவேற்பும் அப்படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும். அப்படி இருக்கையில் காலையில் வருபவர்கள் ப்ரெஷாக இருந்தால் தான் கதையின் அம்சம் புலப்படும் என்பதால் இயக்குனர் அனைவரையும் நன்றாக தூங்கி எழுந்து படம் பார்க்க வரவும் என கூறியுள்ளார்.

இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் வாசு தேவ் மேனன் – சிம்பு கூட்டணி அமைந்துள்ளது. கேங்க்ஸ்டார் கதைக்களத்தைக் கொண்டதாக கூறப்படும் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் முதல் பாகம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் நாயகியாக சித்தி இத்னானி, நாயகனின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர்.

படம் பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கிவிட்டு வாருங்கள்-கௌதம் மேனன்

இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விரைவில் திரைக்கு வருவதால் இந்த படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதன்படி தணிக்கை சான்றிதழ் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு சிம்பு ஹெலிகாப்படரில் வந்து இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வெந்து தணிந்தது காடு FDFS அதிகாலை 4.30-க்கு தொடங்குகிறது. இங்கு மட்டும் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here