துணிவு படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.

0
10

முதல் சிங்கிள்: ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சில்லா சில்லா’ பாடலை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் பாடியுள்ளார். அதுபோக டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில்லா என்ற ஹேஷ்டாக்கையும் டிரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளருக்கு துணிவு 50வது படமாக அமைந்துள்ளதால் அவருக்கும் இணையதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

thunivu movie's first single release on today evening

இப்படி இருக்கையில் துணிவு படத்தின் 2 பாடல்கள் நேற்று திருட்டுத்தனமாக இணையத்தில் லீக்கானது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக படக்குழுவினர் தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து முயற்சி செய்து இணையதளத்திலிருந்து இந்த 2 பாடல்களையும் நீக்கினர். சம்பந்தபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க படக்குழு யோசித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பாடல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு நேரம் அறிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here