துணிவு: அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித், போனி கபூர், வினோத் கூட்டணியில் ஏற்கனவே ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்கள் வெளி வந்துள்ளன. தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் துணிவு. இந்த படம் வரும் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படமும் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி 11ம் தேதியே அமெரிக்கா, லண்டன் மற்றும் சில நாடுகளில் வெளியாக உள்ளது. அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் முன்பதிவு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இப்போதே தொடங்கியிருக்கிறது. இந்த இரண்டு படமும் ஒரே சமயத்தில் வெளியாவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் சிரஞ்சீவி நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’, பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘வீர சிம்ம ரெட்டி’ ஆகிய படங்களும் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.