துணிவு, வாரிசு முதல் காட்சிகளை பார்த்த (FDFS) திரைப்பிரபலங்கள்

0
17

துணிவு, வாரிசு முதல் காட்சிகளை பார்த்த (FDFS) திரைப்பிரபலங்கள் அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்கள் 9 வருடங்கள் கடந்து ஓரே நாட்களில் வெளியாகி இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த நிலையில் இவ்விரு படத்தையும் பார்த்த திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் துணிவு இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். மேலும், மஞ்சுவாரியர், சமூதிரக்கனி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. டிரைலரும் மாஸாக இருந்ததாகவும் இதன் டிரைலரை இந்திய சினிமாத் துரையில் முதன் முறையாக ஹாலோகிராம் மூலம் வெளியாகி பிரபலம் பெற்றது. இந்த படத்தை போனிக்கபூர் தயாரித்துள்ளார்.

துணிவு, வாரிசு முதல் காட்சிகளை பார்த்த (FDFS) திரைப்பிரபலங்கள்

இதனை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் திரையரங்கம் முன் கூடி பட்டாசுகளை வெடித்து மேளம் கொட்டி ஆடி பாடி இப்படத்தின் முதல் காட்சியை வரவேற்று ரசித்து பார்த்தனர்.

இதைபோலவே விஜயின் வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சியை அவரது ரசிகர்கள் வெடி வெடித்து மேலதாளங்களுடன் திரையரங்கும்  முன் கூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி முதல் காட்சியை வரவேற்று பார்த்தனர். இந்த இரு படங்களும் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையின் நாயகர்களாக ரசிகர்கள் மனதில் இருந்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தமண் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தில்ராஜ் தயாரித்துள்ளார். பல பிரச்சனைகளை சந்தித்து வெளியாகி இருக்கும் திரைப்படமாகவும் வாரிசு இருந்து வருகிறது. இன்று இப்படம் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த இரு திரைப்படங்களையும் ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் பார்த்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர்.

FDFS பார்த்த நடிகை திரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இணைந்து துணிவு, வாரிசு திரைப்படங்களின் முதல் காட்சியை பார்த்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி திரையரங்கில் படம் பார்ப்பது குறித்து ட்வீட் போட்டுள்ள நிலையில், திரிஷா இன்ஸ்டாவில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் வெறித்தனமாக நடித்திருப்பதாகவும், ஆக்ஷன், திரைக்கதை, நடிப்பு, சமூக கருத்து ஆகியவை மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அவர் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

துணிவு படத்தில் முதல் பாதி முடிந்தவுடன் சற்று நேரத்தில் வரும் சில்லா சில்லா பாடல் திரையரங்கில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் முதல் காட்சி நிறைவடைந்த நிலையில், இரு படங்கள் குறித்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களிலும் சிறு சிறு குறைபாடுகள் கூறப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இரண்டு படங்களும் கொண்டாட தகுந்தவை என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இரண்டு ரசிகர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கலை தல தளபதி  பொங்கலாக தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளது

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here