துணிவு, வாரிசு திரைப்படம் 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித், விஜய் இருவரின் படங்களும் ஓரே நாளில் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் இந்த பொங்கலை கொண்டாடி வரவேற்று வருகின்றனர்.
தமிழ் சினிமாத் துறையில் அஜித் மற்றும் விஜய் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளனர். துணிவு படத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். போனிக்கபூர் இப்படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமத்துள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது.
இதனை வரவேற்ற ரசிகர்கள் மேலதாளத்துடன் பட்டாசுகளை வெடித்து பேனர்களுக்கு மாலை மற்றும் பால் அபிஷேகம் செய்து ஆராவாரமாக படத்தை பார்த்து மகிழ்ந்தனர். துணிவு படத்தில் அஜித் தனக்கே உரிய கொள்ளை சம்பவத்தை மங்காத்தாவை விட சிறப்பான ஆக்ஷ்ன் நாயகனாக ரசிகர்களுக்கு மாஸான என்ரியை கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

விஜய் ரசிகர்களும் வாரிசு திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். வாரிசு திரைப்படத்தில் முதன் முறையாக தெலுங்கு இயக்குனருடன் இணைந்த விஜய் முற்றுலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் குடும்பத்தினருக்கு பிடிக்கும் வகையில் மாஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார் தில்ராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். தமண் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களில் விஜய் டான்சில் பட்டை கிளப்பியுள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழாவை அனைவரும் கண்டு ரசித்தார்கள்.
தற்போது, இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடைய வைத்தது. அஜித், விஜய் இருவரின் படங்களும் ஓரே நாளில் வெளியாகி உள்ளதால் வசூலில் எந்த படம் அதிக மாஸாக இருக்கும் என்ற ஆவல் அனைவருக்கும் காணப்படும். அஜித்தின் துணிவு மிக பெரும் ஆக்ஷன் படமாகவும் விஜயின் வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப படமாகவும் இருக்கின்றது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 17 கோடி, கர்நாடகாவில் 5.65 கோடி, கேரளாவில் 4.5 கோடி மற்றும் பிற இடங்களில் 1 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தம் வாரிசு திரைப்படம் 26.50 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது. அதுவே துணிவு படம் வாரிசை காட்டிலும் 50 லட்சம் குறைவாக பெற்று இந்தியா முழுவதும் 26 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வாரிசை விட துணிவு தான் அதிகமாக வசூல் செய்துள்ளது.
அதாவது 18 கோடிக்கு மேல் துணிவு படம் வசூல் செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் 2.5 கோடியும், கர்நாடகாவில் 3.5 கோடியும், கேரளாவில் 1.5 கோடியும் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் 50 லட்சம் மட்டுமே துணிவு படம் வசூல் செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: துணிவு, வாரிசு முதல் காட்சிகளை பார்த்த (FDFS) திரைப்பிரபலங்கள்
இவ்விருவரின் படங்களும் முதல் நாள் வசூலில் பெரிய மாற்றம் இன்றி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.