துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளது என்ற தகவல் படத்தின் டைட்டில் கார்டுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
நடிகர் அஜித்தின் துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இவர் அஜித்துடன் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். போனிக்கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் மூவிசுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் சமூத்திரக்கனி, மஞ்சுவாரியர், விநாயக் போன்ற முக்கிய திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று வெளியாகி இந்தாண்டு பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் பெற்றுள்ளதாக டைட்டில் கார்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். முதன் முறையாக தெலுங்கு இயக்குனரான வம்சியுடன் இணைந்துள்ளார் விஜய். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இவ்விரு படங்களும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை தில்ராஜ் தயாரித்துள்ளார். தமண் இசையமைத்துள்ளார் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரால் ஆன நிலையில் இப்படம் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் பெற்றுள்ளதாக டைட்டில் கார்டின் மூலம் அறிய முடிகிறது. கடந்த 9 வருடங்களுக்கு பிறகு இவ்விரு நடிகர்களின் படங்களும் ஓரே நாளில் வெளியாவதால் திரையரங்கம் முழுவதும் ரசிர்களால் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இதையும் படியுங்கள்: துணிவு, வாரிசு முதல் காட்சிகளை பார்த்த (FDFS) திரைப்பிரபலங்கள்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.