ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண வந்த துணிவு பட வில்லன்

0
7

துணிவு: அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் துணிவு. இதில் வங்கி சேர்மன் கேரக்டரில் வில்லனாக ஜான் கொக்கேன் நடித்திருந்தார். இவர் மலையாள நடிகர். இவர் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை குடும்பத்துடன் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘எப்படிச் சொல்வதென தெரியவில்லை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியம். நம் கலாச்சாரம். அதைக் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். மதுரையில் பொங்கல் கொண்டாட்டம் என்பதே வேற மாதிரியான அனுபவம். மதுரை மக்கள், மதுரை ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

thunivu villan john in palamedu jallikattu

மதுரையில் வந்து திரைப்படம் பார்க்கும் உணர்வு நகரத்தில் கிடைக்காது. எனது அண்ணன்தான் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு கடந்த 10 வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த வருடம் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் மதுரை மண்ணில் வந்து பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி. ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கெல்லாம் மிக தைரியம் வேண்டும். இந்த வீரர்களை பார்க்கும்போது பெருமையாக இருந்தது’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here