மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஓலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. ரூபாய் 200, 300, 2000, 3000, 6000, 8000 என்ற விலையில் tickets.aicf.in இணையத்தளத்தின் மூலமும் பெறலாம்.
சர்வதேச செஸ் விளையாட்டு போட்டி வருகின்ற ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிக விறுவிறுப்புடன் நடக்கிறது. உலகம் முழுவதிலிமிருந்து 2500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
செஸ் ஓலிம்பியாட் போட்டி 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதன் முதலாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது பெருமைக்குரியது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செஸ் ஓலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள இடத்தையும் பணிகளையும் பார்வையிட்டார்.
44வது செஸ் ஓலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. 200,300,2000, 3000, 6000, 8000 என டிக்கெட் விலை உள்ளது. இதனை ஆன்லைன் மூலமும் பெறலாம்.