சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு 9ந் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்

0
5

சென்னை: 2023 ஆம் ஆண்டின் 16வது ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தந்த அணிகள் தங்களது பலத்தை காட்டி வருகிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 முறை ஐபிஎல் விருதை பெற்று தந்த தோனியே இம்முறையும் வழி நடத்தி வருகிறார்.

முதலாவது போட்டியில் சென்னை அணியை வென்று அசத்தலான முதலாவது வெற்றியுடன் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ் அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த நிலையில் இரண்டாவது போட்டியான லக்னோ ஜெயின்ட்ஸ் அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஆண்டின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

சேப்பாக்கம் மைதானம்
சேப்பாக்கம் மைதானம்

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது வருகிற 12ந் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்வுடனான போட்டி நடைபெற இருக்கின்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற 9ந் தேதி டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் C.D.E. LOWER 1,500, D.E. UPPER 3,000, I.J .K LOWER 2,500, I.J.K. UPPER 2,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் விற்பனை அன்று தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் விருதை பெற போகும் அணி எது என்று அனைவரும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

சென்னை அணியை பொறுத்த அளவில் பேட்டிங் சரியாக இருந்தாலும் பவுலிங் மோசமாக உள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் இம்முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பாருங்குகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here