ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது

0
9

ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியிட்டது படக்குழு.

ரேடியோவில் RJவாக அறிமுகமாகி தன் பேச்சாற்றலால் மக்களை கவர்ந்து இன்று நடிகனாக வளர்ந்தவர் RJ பாலாஜி இவர் தற்போது ஓளிப்பரப்பாகி வரும் கிரிக்கெட் போட்டிகளிலும் தன் வாய்யால் வடை சுடுவதை பொழுது போக்காக ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

பல முக்கிய கதாநாயகர்களின் நண்பனாக வந்து காமெடிகளை நிகழ்த்தி வந்தவர். LKG படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி வெற்றி கண்டவர். பின்னர், தானே எழுதிய படமான முக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தின் வெற்றி மூலம் ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றார்.

ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது

இப்படத்தில் RJ பாலாஜிக்கு அம்மாவாக ஊர்வசி வந்து இப்படம் முழுவதும் நகைச்சுவையை அள்ளி தருவதாக இருந்தது. படத்தின் இறுதியில் கடவுளை மனதால் நம்பு அதை விட்டுவிட்டு கடவுள் பெயரை சொல்லி கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் சாமியார்களின் போலி வேஷத்தை சாடுவதாக இப்படத்தின் கருத்து இருக்கும் இதை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்தனர்.

அடுத்ததாக, வீட்ல விஷேஷங்க என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து வெற்றி படங்களை கண்டு வரும் பாலாஜிக்கு அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய கோகுல் படத்தை இயக்கி இருக்கின்றார்.

இந்த படம் அடுத்த கோடைக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரிலும் ஆர்.ஜே.பாலாஜி புதிய தோற்றத்திலும் நடித்து வருவதை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here