அஜித் 61வது படத்தின் தலைப்பு மற்றும் First Look அனைவரையும் கவர்ந்துள்ளது

0
14

அஜித் குமார் தனது 61 திரைப்படத்தை வலிமை படத்தை இயக்கிய ஹெச். வினோத் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துள்ள நிலையில் இன்னும் சில காட்சிகளின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏகே 61 படத்தின் தலைப்பு துணிவே துணை என படக்குழு வைத்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அஜித் இறுதியாக நடித்த படம் வலிமை இப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் மிக முக்கியமாக பைக் ரேசிங் ரசிகர்களை விசில் அடிக்கச் செய்தது.

அப்படம் பெரும் வெற்றியை பெற்று வசூலிலும் நன்றாக கல்லாக் கட்டியது. அதனை தொடர்ந்து அடுத்த வரும் படத்தையும் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஓரு வங்கியில் கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்கள் தரமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அஜித் 61வது படத்தின் தலைப்பு மற்றும் First Look அனைவரையும் கவர்ந்துள்ளது

போனிக் கபூர் தயாரிப்பில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஏகே 61’ படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் சென்றிருந்தார். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. வட இந்தியாவில் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றிருந்த அஜித்தின் பல புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட உணர்வை தந்தன. அந்த ட்ரிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டார் அஜித்.

இதற்கிடையே ஏகே61 படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்துக்கு ‘துணிவே துணை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இப்படத்தின் AK 61 First Look வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here