தமிழகம்: சுற்றுலா துறையின் மானிய கோரிக்கைகள் வெளியீடு

0
31

தமிழக சுற்றுலா துறையை மேம்படுத்தவம் தமிழர்களின் பண்பாடு நாகரீகங்கள் பாதுகாக்கவும் சுற்றுலா துறை மீதான மானிய கோரிக்கைகள் பெரும் அளவில் உதவும் அதன்படி பல அறிவிப்புகளை இன்று சுற்றுலா துறை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்தார்.

சென்னையில் சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் என்னும் திட்டத்தை பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் வழியாக HOP ON HOP OFF என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழகம்: சுற்றுலா துறையின் மானிய கோரிக்கைகள் வெளியீடு
தமிழகம்: சுற்றுலா துறையின் மானிய கோரிக்கைகள் வெளியீடு

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் கூடிய அளவில் ரூ 15 கோடியில் மேம்படுத்தப்படும்.

சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் திருப்பதி தனசரி தரிசன நுழைவுச சீட்டை 1000 மாக உயர்த்த வழிவகை செய்யப்படும்.

திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கன்னியாகுமரியில் 7 கோடியில் புதிய படகு இறங்குதளம் அமைக்கப்படும் என அறிவிப்பு.

கன்னியாகுமரி முட்டம் கடற்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி சுற்றுலா தலங்கள் 6.60 கோடியில் மேம்படுத்தப்படும்.

வண்டலூர், கோவளம், ஏற்காடு சுற்றுலா தலங்களில் 75 லட்சம் மதிப்பில் சிறு உணவகங்கள் அமைக்கப்படும்.

4 முக்கிய கோவில்களில் முப்பரிணாம லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஓலி-ஓளிக் காட்சி அமைக்கப்படும்.

போன்ற பல சுற்றுலா துறையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மக்களுக்கு பயன்படுகின்ற வகையிலும் சுற்றுலா துறையின் அறிவிப்புகள் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here