தமிழ் நாடு: 5 வயது குழந்தைக்கு இனி பேருந்தில் கட்டணம் இல்லை

0
27

தமிழ் நாட்டில் 5 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என்று அறிவித்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்.

தற்போது 3 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பேருந்தில் அரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அதில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி பேருந்தில் பயணிக்க கட்டணம் இல்லை இலவசமாக பயணிக்கலாம் என சட்டப்பேரவையில் போக்குவரத்து மீதான பட்ஜெட்டின் போது இதனை அறிவித்தார், போக்குவரத்துத் துறை அமைச்சர் சவசங்கர் அறிவிப்பு.

5 வயது குழந்தைக்கு இனி பேருந்தில் கட்டணம் இல்லை
தமிழ் நாட்டில்: 5 வயது குழந்தைக்கு இனி பேருந்தில் கட்டணம் இல்லை

சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மீதான மானிய கோரிக்கையின் போது கழிப்பறைகளுடன் கூடிய பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று பிரபாகரன் எம் எல் ஏ கோரிக்கை ஓன்றை முன் வைத்தார்.

நீண்ட தூரம் பயணிக்கும் பயணியர்களின் நலன் கருதியும் சிரம்மின்றி பயணிக்கவும் கழிப்பறைகளுடன் கூடிய பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அனைத்து பேருந்து நிலையங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி நவீன வசதிகளுடன் அதை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் ( SEZ ) அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த பிரபாகரன், தமிழ்நாட்டில் கல்விச் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா போன்றவற்றை அரசே நடத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here