எண்ணும் எழுத்தும் திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்

0
18

எண்ணும் எழுத்தும்‘ திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் 2 வருட காலமாக சரியாக இயங்காததால் மாணவர்களின் கற்றல் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியது.

1ஆம் 2 ஆம் வகுப்பு கல்வி பயிலாமலே 3 ஆம் வகுப்புக்கு மாணவர்கள் செல்லும் நிலையில் உள்ளது.  மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் காரணமாக 8 வயது வரை உள்ள மாணவர்களின் கல்வி திறனை 2025 க்குள் உயர்த்தவும் பிழையின்றி எழுதவும் நன்றாக எண்களை சரியாக பயன்படுத்தி கணிதத்தை போடவும் மாணவர்களை தயார் படுத்தும் திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை நேற்று திருவள்ளூரில் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஓன்றிய  நடுநிலை பள்ளியில் தொடங்கி வைத்தார்.

எண்ணும் எழுத்தும் திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்
எண்ணும் எழுத்தும் திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்

கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

கதை, ஆடல், பாடல் என பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார். படிப்பு..படிப்பு..படிப்பு என்று ஆர்வத்தோடு படிக்க வேண்டும். படிக்காதவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்று யாராவது உதாரணமாக சொன்னால் அதை சட்டை செய்ய வேண்டாம். படித்து சாதித்தவர்களை நாம் உதாரணமாக காண்பிக்க வேண்டும் என்றார்.

கல்விதான் அழிக்க முடியாத சொத்து அந்த கல்வியை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று முதல்வராக மட்டுமல்ல ஒரு தகப்பனாக கேட்டுக்கொள்கிறேன் உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்னார் முதல்வர்.

8 வயது உள்ள குழந்தைகள் அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் ஓவ்வொரு குழந்தைகளும் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் தலையாய நோக்கம் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை செயலாளர் காகர்லா உஷா, கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here