எல்கேஜி மற்றும யூகேஜி வகுப்பிற்கு 5000 விரைவில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் முதற்கட்டமாக 2500 சிறப்பாசிரியர்களை நியமமிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் அதாவது அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த LKG, UKG வகுப்புகள். அதனை, இவ்வாண்டு முதல் அங்கன்வாடியுடன் இணைத்து அங்கன்வாடி மையங்களில்எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் நடைபெறும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாமல், இடைநிலை ஆசிரியர்களால் மழலையர் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பெற்றோர்கள் முதல் பொது மக்கள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், எதிர்கட்சிகள் மற்றும் பல அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பும் ஆதரவையும் வழங்கி வந்தனர்.
அதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் கடந்த ஆண்டை போல அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவித்தார். அதற்கு தேவையான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி 5000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டது. DEE முடித்த பெண்களுக்கு முன்னிரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2500 சிறப்பாசிரியர்களை நியமிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.