தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பேருந்துகளில் பேனிக் பட்டன்

0
8

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்குக்காக அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன் (PANIC BUTTON) அமைக்கபட உள்ளது. பேருந்துகளில் ஏற்படும் குற்றங்களை கண்டறியவும் உரிய நபர்களுக்கு சரியான தீர்வு காணவும் பேருந்துகளில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை களைந்து பெண்கள் நல்முறையில் பயணம் செய்யவும் ஏற்படுத்தப்படுவது பேனிக் பட்டன்.

முன்னதாக சென்னை மாநகர பேருந்துகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிட தக்கது. மாநகரப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாக பேனிக் பட்டன் அபாய ஓலி எழுப்பும் சாதனம் ஓருங்கினைந்த GPS கருவியோடு பொருத்தப்பட்டு, சிசிடிவி கேமராவும் 500 பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் 2800 பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தனர்.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பேருந்துகளில் பேனிக் பட்டன்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன்

நரிகுறவர்களை பேருந்துகளில் ஏற்றுவதில்லை என்றும் பேருந்து நடத்துனர் ஓரு சிலர் பயணியிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதாகவும் பெண்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை என்றும் பலர் கூறி வந்ததை அடுத்து இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here