RTE திட்டத்தில் ஏழை எளிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 18 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் அனைவரும் தன் குழந்தைகளை நன்றாக மற்றும் நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்க வேண்டும் என்பதே மிகப் பெரிய கனவாக இருக்கும். ஆனால் அனைத்து பெற்றோர்களாளும் தனியார் பள்ளிகளில் சேர்க்க பொருளாதார ரீதியாக இயலாது.
RTE என்றால் என்ன?
அதனை அடிப்படையாக கொண்டு எடுத்து வரப்பட்ட திட்டம் தான் இந்த கட்டாய கல்வி உரிமை சட்டம் எனப்படும் RTE (RIGHT TO EDUCATION). இதன்முலம் தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ் பள்ளியில் LKG முதல் 8ம் வகுப்பு வரை 25 சதவீகித மானியத்துடன் மாணவர்கள் கல்வி கற்க முடியும்.
இம்மானியத் தொகையை அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும். இத்திட்டமானது 2009 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
இவ்வாண்டுக்கான RTE அறிவிப்பு
2022-2023 க்கான RTE திட்டத்தில் ஏழை எளிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 22 ம் தேதி முதல் மே 18 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
RTE க்கு விண்ணப்பிப்பது எப்படி?
- தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளியில் பயில பள்ளிக்கல்வித் துறையின் http://tnschools.gov.in/ இணையத்தள முகவரி்க்கு செல்ல வேண்டும்.
- சேவை பிரிவில் உள்ள ஆர் டி இ (RTE) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதன்பின் http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற பக்கத்திற்கு செல்வோம்.
- STRAT APPLICATION என்பதை க்ளிக் செய்தால் விண்ணப்ப படிவம் உள்ள பக்கம் தோன்றும்.
- விண்ணப்பத்தில் மாணவர் விபரம், பெற்றோர் விபரம், முகவரி, பிறப்பு சான்றிதழ் ஆகிய விபரங்கள் அளித்த பிறகு உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளி விபரங்கள் வரும்.
- அனைத்தையும் விண்ணப்பித்த பிறகு சமர்ப்பி என்பதை க்ளிக் செய்யவும்.
உங்கள் தொலைபேசிக்கு ஓரு எண் வரும் அதனை கொண்டு தான் குலுக்கலில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விண்ணப்பிக்க தகுதிகள்
நலிவுற்ற குடும்பத்திற்காக கொண்டு வந்த இத்திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 1,00,000 த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ் (INCOME CERTIFCATE) அவசியம்.
தேவையான ஆவணங்கள்
- பிறப்புச் சான்றிதழ்
- இருப்பிடச் சான்று
- ஆதார் கார்டு அல்லது குடும்ப அட்டை
- குழந்தை போட்டோ
- சாதி சான்றிதழ்
- வருமான சான்று
அரசாங்கம் பள்ளியில் 25% மானியத் தொகை மட்டுமே தரும் மீத தொகையை செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு அதுமட்டும் மின்றி புத்தக செலவு சீருடைக்கான செலவு ஆகியவற்றிற்கும் பெற்றோரே பொறுப்பு.