ஆன்லைன் சூதாட்டம் (RUMMY) எனப்படும் விளையாட்டின் மூலம் தற்கொலைகளும் கொலைகளும் இந்த சமூகத்தில் நடைபெற்று கொண்டே தான் உள்ளது. வேலுர் மாவட்டம் குடியாத்தம அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர். அவரின் வீட்டிற்கு பின்னால் அடித்து கொலை செய்து எரிக்கப்பட்டிருகிறார். இது தொடர்பாக குடுபத்தினரை காவல் துறை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
“முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் ஆன்லைன் சூதாட மற்றவர்களை கொலை செய்தனர். இப்போது ஆன்லைன் சூதாடியவர்கள் கொல்லப்படுகின்றனர்” என பாமாக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
“இப்படி ஆன்லைன் சூதாட்டங்கள் பல வழிகளில் நடைபெற்று வருகிறது. பல குற்றங்களின் பிறப்படமாக ஆன்லைன் சூதாட்டங்கள் காணப்படுகிறது. இதை உடனடியாக தடுக்காவிட்டால் வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத பெரும் பிரச்சனையாக வருங்காலங்களில் உருவெடுக்கும்.”
“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.